மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டத்திற்கு தயாராகும் தமிழரசு கட்சி!

வடக்கிலே ஆறாயிரம் ஏக்கர் காணி பறிபோகும் அபாயம் காணப்படுவதாகவும், அது குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீள பெறவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறவேண்டும் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் தற்போது கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

நேற்று நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசு கட்சி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.