மக்களை மௌனமாக்கி கருத்தை ஒடுக்கவே இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் வருகிறது – மார்ச் 12 இயக்கம்

march12 மக்களை மௌனமாக்கி கருத்தை ஒடுக்கவே இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் வருகிறது - மார்ச் 12 இயக்கம்மக்களை மௌனமாக்குவதற்காகவும் மக்களின் கருத்துக்களை ஒடுக்குவதற்காகவுமே இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறை வேற்றியுள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மூலம் அடிப்படை உரிமைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்பதையும் இலங்கையின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகளிற்கு ஆபத்தானது என்பதையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம் என்றும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போதைய அரசாங்கம் இந்த சட்டமூலத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் காண்பிக்கும் முயற்சியானது, மிக முக்கியமான பொருளாதார சீர்திருத்த மற்றும் எதிர்வரும தேர்தல் காலங்களில் கருத்து வேறுபாடுகளை கொண்டவர்களை மௌனமாக்கும், சிவில் செயற்பாடுகளை ஒடுக்கும் அரசாங்கத்தின் நோக்கங்கள் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

இதேவேளை அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாத மக்கள் மௌனமாக துயரத்தை அனுபவிக்கும் அதேவேளை, ஆட்சியாளர்கள் இந்த மௌனம் கீழ்ப்படிதல் எனக் கருதக்கூடாது என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.