போலந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ சிகோர்ஸ்கி (Radosław Sikorski) மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று புதன்கிழமை (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தின் தலைமையில் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த உத்தியோக பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கிவுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
போலந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இலங்கையின் பல உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.