இலங்கை கடற்கரையிலிருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் ஒரு சரக்குக் கப்பலில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று ஏறி, சீனா விலிருந்து ஈரானுக்குச் செல்லும் இராணுவம் தொடர்பான பொருட்களை கைப்பற்றியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த மாதம் நிகழ்ந்துள்ளது, மேலும் ஈரான் தனது இராணுவ ஆயுதக் கிடங்கை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தடுக்கும் நோக்கில் கடலில் ஒரு அரிய தடை நடவடிக்கை இது என்று அந்த ஊடகம் வெள்ளிக் கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளை மையத்துடன் இணைக்கப்பட்ட துருப்புக்களே இலங்கைக்கு அருகில் உள்ள கடலில் வைத்து கப்பலை கைப்பற்றி சோதனை நடத்தி, சரக்குக ளைப் பறிமுதல் செய்து, கப்பலைத் தொடர அனுமதித்ததாகவும், அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் பல மாதங்களாக கப்பலைக் கண் காணித்து வந்ததாகவும் அது கூறியது.
ஆனால் கடந்த மாதம் அமெரிக்கா இலங் கைக்கு வழங்கிய கடலுக்கடியில் உளவுபார்க் கும் கருவிகளை கொண்டே இந்த கப்பலை கண்காணித்ததாக கொழும்பு தகவல்கள் தெரி விக்கின்றன. அமெரிக்காவும், யப்பானும் இரண்டு கருவிகளை வழங்கியிருந்தன. இந்த கருவிகள் கொழும்பு மற்றும் திருமலை துறை முகங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் கப்பல்களினுள் உள்ள பொருட்களை மின்காந்த அலைகள் மூலம் கண்டறிய முடியும், கதிர்வீச்சுக் கொண்ட அணுசக்திப் பொருட்கள், வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்களை கண்டறிய முடியும்.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயல் அனர்த்தத்தின் போது அமெரிக்கா வின் சி-130 கேர்கூல்ஸ் இராணுவ விமானங்களின் இலங்கை வரவுக்கும் இலங்கை கடல்பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த கடல் நடவடிக்கைக்கும் ஏதும் தொடர்புகள் இருக்குமா என்ற சந்தேகங்கள் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜூன் மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் தெஹ்ரானின் அணுசக்தி நிலையங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதிலிருந்து, அதன் ஏவுகணை வசதிகளை மறுசீரமைக்க ஈரான் மேற்கொள்ளும் இராணுவ கொள்முதல் முயற்சிகளை சீர்குலைக் கும் பென்டகன் முயற்சியின் ஒரு பகுதியாக இரகசியமான இந்த சோதனை இருந்துள்ளது.
புதன்கிழமை, வெனிசுலா கடற்கரையில் அமெரிக்கா ஒரு தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றியது, இது அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, வெனி சுலாவிலிருந்து ஈரானுக்கு எண்ணெய் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இவ் வாறான சோதனைகளை, சமீப காலங்களில் அமெரிக்கா அரிதாகவே பயன்படுத்தி வந்துள்ளது. தனது எதிரிகளுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் ஆக்ரோஷமான கடல்சார் தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதை இந்த நடவடிக்கைகள் அடிக் கோடிட்டுக் காட்டுகிறது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ஈரான் மற்றும் சீனாவிடம் இருந்து கருத்து பெற அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஊடகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இலங்கையில், இந்த நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகத் தையும் கடற்படையையும் தொடர்பு கொண்ட போது, இரு தரப்பும் கருத்து தெரிவிக்க மறுத்தது டன், உண்மைகளைச் சரிபார்க்க தமக்கு கூடுதல் அவகாசம் தருமாறும் கோரியுள்ளனர்
அதேசமயம் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செய லாளர் அலிசன் ஹூக்கரை இலங்கை ஜனாதிபதி கடந்த வாரம் சந்தித்திருந்தார், அவர்கள் இருவரும் ‘பொருளாதார மற்றும் வணிக உறவுகளை ஆழப்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண் மையை ஆதரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத் தும் பல்வேறு இருதரப்பு பிரச்சினைகள்’ குறித்து விவாதித்திருந்தனர்.
இலங்கை ஒரு சிக்கலான மீட்சியை எதிர்கொள்கிறது, ஆனால் அமெரிக்கா போன்ற நண்பர்களின் உதவியுடன், நமது உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டி யெழுப்புவோம்” என்று அனுரா தனது அதிகாரப் பூர்வ X பக்கத்தில் தெரிவித்துள்ளார். தேவைப்படும் நேரத்தில் இலங்கையுடன் நின்றதற்காக அமெரிக்கா மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஜனாதிபதி தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
“விரைவான C-130 விமானங்களின் வரவுக் கும், உடனடி 2 மில்லியன் டொலர்கள் அவசர உதவியும் நமது நீடித்த கூட்டாண்மையின் வலி மையை பிரதிபலிக்கின்றன, இரு நாடுகளுக்கும் இடையிலான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நமது மக்களிடையே நெருக்கமான உறவுகளில் உறுதியாக வேரூன்றியுள்ளன” என்று அனுரா மேலும் தெரிவித்துள்ளார்.
சூறாவளி மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதர வாக அமெரிக்கா தனது விமானப் போக்குவரத்து திறனை வழங்குவதற்காக அமெரிக்கா தனது இரண்டு C-130து சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களையும், அமெரிக்க விமானப்படை 36வது தற்செயல் மீட்புக் குழுவிலிருந்து பணியாளர்களையும் பசுபிக் பிராந்தியத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பியிருந்தது. வந்த அமெரிக்க துருப்புக்கள் குவாம் மற்றும் பிற பிரிவுகளிலிருந்தும், அமெரிக்க விமானப்படையின் 374வது விமானப் போக்கு வரத்துப் பிரிவு (யோகோட்டா விமானத் தளம், ஜப்பான்) மற்றும் அமெரிக்க மரைன் கார்ப்ஸின் III மரைன் பயணப் படை (ஓகினாவா ஜப்பான்) ஆகிய வற்றிலிருந்தும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விமானப் படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கட்டு நாயக்காவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்திற்கும் விஜயம் செய்திருந்தார். போர்த் துறையின் மாநில கூட்டுத் திட்டத்தின் (SPP) கீழ் மொன்டானா தேசிய காவல்படை, அமெரிக்க கடலோர காவல்படை மாவட்டம் 13 மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையேயான பாதுகாப்பு கூட்டாண்மையை முறைப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் இலங்கையும் கையெழுத்திட்ட ஒரு மாதத்திற்குள் அமெரிக்க உதவி வந்துள்ளது.
இராணுவ மற்றும் சிவில் பேரிடர் தயார்நிலை மற்றும் பதில் மற்றும் பேரிடர் தயார் நிலை, பதில் மற்றும் மீட்புக்கான இராணுவ-பொதுமக்கள் ஒருங்கிணைப்பு ஆகியவை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் துணைப் பாது காப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர அமெரிக்க-இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முழு சரத்தையும் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் அதனை முன்வைக்கவில்லை. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் கூட்டு நடவடிக்கைகள் 2026 கோடையில் திட்டமிடப்பட்டிருந்தாலும் அது செய்யப்படவில்லை. இந்த நடவடிக்கைகள் பேரிடர் மீட்பு, கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க நேரிடையாகவே களமிறங்கி யுள்ளது.
அமெரிக்க விமானப் படையினர் இலங்கை வரவு, அதன் பின்னர் இலங்கை கடல்பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்ட ஈரானின் கப்பல் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கரின் வரவு என்பன இலங்கை அரசு எதையோ மறைப்பதை காட்டுகின்றது. இதற்கிடையில், கடந்த வாரம் ஓமன் வளைகுடாவில் ஈரான் ஒரு எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றியதாகவும், இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 18 பணியாளர்கள் அதில் இருந்ததாகவும் ஏஜென்சி அறிக்கைகள் தெரிவித் தன.
“ஆறு மில்லியன் லிட்டர் கடத்தல் டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற எண்ணெய் டேங்கர் ஓமன் கடலின் கடற்கரையில் தரை யிறக்கப்பட்டுள்ளது” என்று ஈரானை தளமாகக் கொண்ட ஃபார்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. “கப்பலின் அனைத்து வழிசெலுத்தல் அமைப்புகளையும் தாங்கள் முடக்கியுள்ளதாகவும், வளைகுடாவில் சட்டவிரோதமாக எரிபொருளைக் கொண்டு செல்வதாகக் கூறும் கப்பல்களை இடைமறித்து தாம் கைப்பற்றி வருவதாகவும் ஈரான் படைகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.
கடந்த மாதம் “இரகசியமாக சரக்குகளை எடுத்துச் சென்றதற்காக” ஈரான் ஒரு எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றியது, இது மற்றொரு நாட்டிற்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை என்ற மேற்குலகத்தின் கருத்துக்களையும் அது நிராகரித்திருந்தது. எனினும் இலங்கை கடல் பகுதியில் அமெரிக்க ஈரானின் கப்பலை கைப் பற்றியதற்கு பதிலாகவே ஈரான் இந்த கப்பலை கைப்பற்றியதாக என்ற சந்தேகங்களும் எழுந்துள் ளன.



