பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கை மீண்டதாக அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதாக அனைத்துலக நாணயநியதியம் விரைவில் அறிவிக்கும் என இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கா கடந்த புதன்கிழமை(6) தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் காலம் எடுக்கலாம். ஆதற்கான திட்டங்களை நாம் வகுக்கவேண்டும். எதிர்வரும் 10 ஆண்டுகளில் இந்த வீழ்ச்சி மீண்டும் நிகழலாம். எனவே ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் மீழாய்வு செய்யப்படவேண்டும்.

300000 நிலப்பகுதி விவசாயத்திற்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசயம், 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது 5 மில்லியனாக அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கையினை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய மிகப்பெரும் பொறுப்பு இந்தியாவுக்கே சாரும் என கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனைத்துலக நாணயநிதியத்திற்கு உறுதிமொழிகளை வழங்கி, மிகப்பெரும் தனியார் கடன் கொடுக்கும் அமைப்பான பரீஸ்கிளப் எனப்படும் அமைப்புடன் யப்பானை இணைத்து இலங்கையை இந்த வீழ்ச்சியில் இருந்து இந்தியா காப்பாற்றியிருந்தது.