பொது வேட்பாளர் முயற்சிக்கு கடைசி வரை இடமளியாதீர் – மாவையைத் தொடா்புகொண்ட சம்பந்தன் வலியுறுத்தல்

வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம். அதற்கு எக்காரணம் கொண்டும் தமிழரசுக் கட்சி இணங்கவும் கூடாது, இடமளிக்கவும் கூடாது. அந்த முயற்சிக்குக் கடைசி வரை வாய்ப்பளிக்காதீர்கள். கட்சிக்குள் இது தொடர்பான விடயத்தை உறுதியாக எதிர்த்து நில்லுங்கள்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலையும் தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறாா்.

மாவை சேனாதிராஜாவுடன் காலையில் தொலைபேசியில் பேசிய சம்பந்தன், அதைத் தொடர்ந்து சுமந்திரன் எம்.பியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது குறித்து விவரித்தார்.

“மாவை சேனாதிராஜாவுடன் இன்று காலை மீண்டும் பேசியுள்ளேன். வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் திட்டம் தமிழினத்துக்குப் பேராபத்தான விடயம். அதற்கு எக்காரணம் கொண்டும் தமிழரசுக் கட்சி இணங்கக் கூடாது, இடமளிக்கவும் கூடாது. கட்சிக்குள் இது தொடர்பான விடயத்தை உறுதியாக எதிர்த்து நில்லுங்கள் என்று அவருக்கக் கூறியுள்ளேன்” என சுமந்திரனிடம் சம்பந்தன் தெரிவித்தாா்.

சிறீதரன் எம்.பிக்கும், சுமந்திரன் எம்.பிக்கும் இது குறித்து தான் நேரில் விவரமாகத் தெரிவித்ததாகவும் மாவையிடம் சம்பந்தன் குறிப்பிட்டாா். சிறீதரன் தம்மை வந்து சந்தித்து அது பற்றி கூறினார் என்று மாவை சேனாதிராஜா எனக்குப் பதில் அளித்தார்” என்று சுமந்திரனிடம் இன்று பகல் சம்பந்தன் தெரிவித்தார்.

சம்பந்தனும் ம சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் பேசியவை பற்றிய மேல் விடயங்களை சம்பந்தனின் மகனும் சுமந்திரனுக்குத் தெரியப்படுத்தினார் எனவும் தமிழரசுக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.