பொதுத்தேர்தல்: வெற்றிபெற்ற துரைராசா ரவிகரனை வரவேற்ற முல்லைத்தீவு மக்கள்!

இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு  வன்னிதேர்தல் தொகுதியில்  வெற்றியீட்டிய  துரைராசா ரவிகரனை வரவேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15) முல்லைத்தீவு நகரில் நடைபெற்றுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற  பாராளுமன்ற தேர்தலில்  வன்னித்தேர்தல் தொகுதியில்  இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக  போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிவாகை சூடிய வேட்பாளர் பாராளுமன்ற  உறுப்பினர்  துரைராசா ரவிகரனை முல்லைத்தீவு மக்கள் அனைவரும் அணிதிரண்டு  வரவேற்கும் நிகழ்வு இன்றையதினம்  முல்லைத்தீவு  நகர் பகுதியில் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில்  மக்களால் வெற்றியீட்டிய  வேட்பாளருக்கு மாலை அணிவித்து வரவேற்று குறித்த வெற்றிக் கொண்டாட்டம் ஆரம்பமாகியிருந்தது.

குறித்த வெற்றி வரவேற்பு நிகழ்வில்  முல்லைத்தீவு மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என  பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.