திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானத்தை பெற்றுத் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது 11 குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் தலா ஒன்றரை இலட்சம் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் குழாய்கள் மற்றும் தூவல் நீர் பாசனக் கருவிகளை ஒரு மாத காலப்பகுதியில் மூன்றாவது முறையாக இன்று வழங்கியது.
 இவற்றை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் அவர்கள் திருகோணமலையில் வைத்து வழங்கி வைத்தார். பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் இதன் மூலம் தங்களது அன்றாட ஜீவனோபாயத்துக்கான ஒரு ஊக்குவிப்பாக காணப்படுகிறது.