பெண்களின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் இடைவெளிகளை அடையாளப்படுத்தல் கலந்துரையாடல்

பெண்களின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் இடைவெளிகளை அடையாளப்படுத்தல்  என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற வட்டமேசைக் கலந்துரையாடலில்   பெண்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்ட சமூக நல்லிணக்கத்திற்கான வலுவூட்டல் தளமாக இது அமைந்திருந்தது. குறித்த கலந்சுரையாடலானது விழுது அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (09)இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் பெண்களின் தலைமைத்துவம் சார்ந்து முக்கிய பேசுபொருளாகிய நலன்புரிசேவைகள், வாழ்வாதாரம், பெண்களின் அரசியல் பங்கேற்பும்,உள்நுழைவு ஆகியவற்றுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.

இத்தகையதொரு ஒத்துழைப்பும் செயற்பாட்டுடன் கூடிய பங்குபற்றலும் தொடர்ந்து இருக்குமானால் பால்நிலை சமத்துவத்துடன் கூடிய சமூக நல்லிணக்கம் எட்டப்படுவது திண்ணம்

இதில் விழுது அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் அபிவர்ணா வர்ணகுலசிங்கம் உட்பட அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.