புலம்பெயர் தமிழர்கள் காணி வழங்க முன்வந்தால், அந்த காணிகளை மலையக மக்களுக்குப் பெற்றுத்தரத் தாம் தயாராக இருப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசு நிலம் வழங்க மறுத்தால் அவர்களை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்டத்துக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயமொன்றின்போது, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை குழுவொன்றை சந்தித்து உரையாடியப்பின் அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மலையகத் தமிழர்கள் கடின உழைப்பாளிகள். அவர்களுக்கு விவசாயம் செய்யவும், பாதுகாப்பாக வாழவும் சொந்த காணிகள் தேவை.
மலையகத்தில் காணி கிடைக்காதபட்சத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியேறுவது ஒரு சாத்தியமான மாற்றாக இருக்கும்.
வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் காணி வழங்க முன்வந்தால், அந்த காணிகளை மலையக மக்களுக்குப் பெற்றுத்தரத் தாம் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.



