புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று முதல் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 03 தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

இதன்படி, முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30 வரை நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 01 இல் நடத்தப்படவுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாள் செயலமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், நாடாளுமன்ற சிறப்புரிமைகள், நாடாளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், நாடாளுமன்ற குழு முறைமை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறை குறித்த நடைமுறை அமர்வொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.