பிரதமர் ஹரிணி அமரசூரிய தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகராக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலம் கடந்துள்ளது. இத்தகைய பின்னணியில் அரசாங்க தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கொள்கையை விதைக்கும் விடயத்தையே பிரதமர் முன்னெடுத்து வருகின்றார் என்றும் அந்த வகையில் புலம் பெயர் அமைப்புக்களின் தரகராகவே பிரதமர் உள்ளார் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார்.



