பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை!

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மின்னஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (20) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனி, நெதர்லாந்து ஐபி முகவரிகளை வைத்திருப்பவர்களே இந்த மின்னஞ்சல் மிரட்டலை விடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், தேசபந்து தென்னக்கோனை கொலை செய்வதற்கான சதிதிட்டம் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

சிறைத்தண்டனை அனுபவிக்கும் சமன் குமார என்பவரிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சினைப்பர் தாக்குதல் மூலம் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்ற பொய்யான தகவல் கிடைத்துள்ளது. இது பொய்யான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.