பிரகீத் எக்னலிகொட தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்க மிரட்டபட்டேன்- இராணுவ அதிகாரி தகவல்

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் போலியான ஆதாரங்களை வெளியிடுமாறு கோரி தன்னை சிஐடியினர் மிரட்ட முயற்சித்தனர் என இராணுவபுலனாய்வு பிரிவின் அதிகாரி கனிஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர், “காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்குமாறு சிஐடியினர் அழுத்தம் கொடுத்தனர்.

பிரேமதிலக என்ற உதவிப்பொலிஸ் அத்தியகட்சகர் துமிந்த சில்வா கோத்தபாய ராஜபக்சவை அதிகம் ஆதரிக்கின்றார். அவர் அதிகம் துள்ளிக்குதிக்கின்றார். நாங்களே அதற்கு அனுமதித்தோம்.

நான் சிஐடியினருக்கு ஆதரவளிக்காவிட்டால் எனக்கும் துமிந்தசில்வாவின் நிலையே ஏற்படும் என பிரேமதிலக தெரிவித்தார்.” என   தெரிவித்துள்ளார்.