இஸ்ரேலின் அறிவுறுத்தல்களு க்கு அமைவாக பாலஸ்தீன மக்களின் பணத்தை பைனான்ஸ் (Binance) எனப்படும் கிறிப்போகரன்சி நிறுவனம் திருடியுள்ளதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பக்ஸ்புல் (Paxful) எனப்படும் கிறிப்போகரன்சி நிறுவனத்தின் தலைவர் ரே யூசெப் இது தொடர்பான குற்றச்சாட்டை கடந்த திங்கட்கிழமை(26) தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இஸ்ரேலிய படையினரின் கோரிக் கைக்கு அமைவாக இந்த நிறுவனம் எல்லா பாலஸ்தீன மக்களின் பணம் முழுவதையும் சட்டவிரோதமாக திருடியுள்ளதாகவும் அதனை மீள ஒப்படைக்க அது மறுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்.
இந்த திருட்டு தொடர் பில் மேன் முறை யீடுகள் பல செய்யப்பட்டபோதும் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமது பணத்தை பறிகொடுத்த மக்களுக்கு பைனான்ஸ் நிறுவனமும் இஸ்ரேலிய அதிகாரிகளும் இணைந்து வழங்கிய கடிதங்களையும் யூசெப் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். எனினும் தாம் குறிப்பிட்ட கணக்குகளில் உள்ள பணத்தை மட்டுமே கையகப்படுத்தி யுள்ளதாக பைனான்ஸ் நிறுவனம் கடந்த புதன் கிழமை(28) தெரிவித்துள்ளது.
பைனான்ஸ் நிறுவனத்தின் இந்த நட வடிக்கை உலக மக்களிடம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதம், சட்டவிரோத பணபரிமாற்றம் போன்ற காரணங்களை முன்வைத்து மேற்குலக நாடுகள் தமது நிதி நிறு வனங்களில் வைப்புச் செய்யப்படும் வேற்று இனத்தவரின் பணங்களை எதிர்காலத்தில் திருடி தமது பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்யலாம் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன.
ரஸ்யாவின் 300 பில்லியன் டொலர்களை திருடியது போல பல நாடுகளின் நிதி வளம் திருடப்படலாம் என்பதால் சீனா போன்ற நாடுகள் மேற்குலக நாடுகளின் வங்கிகளில் உள்ள தமது பணங்களை மெல் மெல்ல வெளியில் எடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.