பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் !

வேலையற்ற பட்டதாரிகள் பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் காரணமாக வேலையற்றபட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.