முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (05) காலை முன்னிலையாகியுள்ளார்.
கமத்தொழில் அமைச்சு அலுவலகத்தை நடத்திச் செல்ல ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள கட்டடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



