ஈழத்தின் தமிழ்தேசிய கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை எனபதை மீண்டும் ஒருதடவை நிரூபித்துள்ளனர் தமிழ்தேசிய கட்சிகள். பாரத்துக்குள் பதில் கேட்டு அழுத்தம் கொடுக்க இரண்டு தமிழ்தேசிய கட்சி அணிகள் இறங்கியுள்ளன.
1. கடந்த 2025, டிசம்பர்,18, ம் திகதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த நால்வரும், தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசனும் இணைந்து ஐவர் கொண்ட குழு தமிழ்நாட்டுக்கு திடீரென சென்று இலங்கையில் தற்போதைய தேசிய மக்கள் அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை திருத்தம் செய்து “ஏக்கியராச்சிய” அரசியலமைப்பை தயாரிப்பதாகவும் அதனை இந்திய அரசு தடுத்து சமஷ்டி அடிப்படையிலான தீர்வு நோக்கிய அரசியலமைப்பு வரைவு வரவேண்டும் என்பதற்கான அழுத்தத்தை தமிழ்நாட்டு முதலமைச்சர் உட்பட தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் இந்திய பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறும் சந்திப்புக்களை தமிழ்நாட்டில் தங்கி இருந்து செய்து வருகின்றனர்.
2. இலங்கை தமிழ் அரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இணைந்து எதிர்வரும் 2025, டிசம்பர்,23, ல் இலங்கையில் உள்ள இந்திய தூதுவரை சந்தித்து மாகாணசபை தேர்தலை தாமதியாது நடத்துவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு வழங்கவேண்டும் என கூறும் சந்திப்பை நடத்த தீர்மானித்துள்ளனர்.
இந்த இரண்டு அணிகளைவிட இன்னும் எஞ்சியிருக்க கூடிய தமிழ்த்தேசிய கட்சிகளான கடந்த 2024 பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா தலைமையிலான ஜனநாய தமிழரசுக்கட்சி, முன்னாள் முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் தலைமையிலாக தமிழ் மக்கள் கூட்டணி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி, சட்டத்தரணி ஶ்ரீகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பனவும் இந்த இரண்டு அணிகளுடனும் சேர்ந்து செல்லவில்லை ஆனால் மாகாணசபை தேர்தல் அறிவித்தால் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடு வார்கள்.
தற்போது தமிழ்நாட்டுக்கு சென்ற தமிழ்தேசிய கட்சி குழுவினர் மாகாணசபை தேர்தலை பற்றி தமிழ் நாட்டு முதல்வருக்கு எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை அவர்களுடைய கோரி க்கை “ஏக்கியராச்சிய” என்ற சிங்களச் சொல் இல்லாமல் “சமஷ்டி” என்ற சொல் புதிய அரசியல் யாப்பில் இடம்பெற வேண்டும் அதுவே வடகிழக்கு மக்களுக்கான அதிகாரப்பகிர்வுக்கு சாத்தியமாகும். இதுவே அவர்களுடைய முதன்மை கோரிக்கை.
இந்திய தூதுவரை எதிர்வரும் 23/12/2025ல், சந்திக்கும் தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதான கோரிக்கை “ஏக்கியராச்சிய” சமஷ்டி பற்றியது இல்லை அவர்களின் கோரிக்கை உடனே மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் அதற்கான அழுத்தத்தை இலங் கைக்கு இந்தியா வழங்கவேண்டும்.
இந்த இரண்டு குழுக்களும் இரண்டுவித மான கோரிக்கைகளை ஒரே நாட்டை நோக்கி பாரதநாட்டை நோக்கி முன்வைக்கின்றனர்.
இரண்டு குழுக்களும் ஒரே குழுவாக சேர்ந்து ஒரு குரலில் இந்தியாவுக்கோ, சர்வ தேசத்துக்கோ, தமிழ் நாட்டுக்கோ ஈழத் தமிழர்களுடைய அபிலாஷைகள் இதுதான் இதில் முதலில் இதனை செய்யுங்கள், அடுத்து இதனை செய்யுங்கள் என்று ஒற்றுமையாக கூறுவதற்கு எந்த ஒரு தமிழ்த்தேசிய கட்சிகளும் தயாராக இல்லாதபோது இலங்கை அரசோ, இந்திய அரசோ இவர்களுடைய கோரிக்கை எத னையும் செவிசாய்த்தாலும் அதனை பெற்றுத்தர முயற்சிக்கமாட்டார்கள்.
அவர்கள் கூறும் விடை அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டில் ஒருதீர்வை கூறுங்கள் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தீர்வும், ஆளுக்கொரு தீர்வும், ஒரு வரை மற்றவர் குறைகூறி விமர்சனம் செய்யும் அரசியலே 2009, மே,18, முள்ளிவாய்க்கால் போர் மௌனத்திற்கு பின்னர் 16, வருடங்களாக தொடரும் அரசியல் செயல்பாடாகும .
மக்களை அணிதிரட்டி பலமான மக்கள் இயக்கமாக திரட்டுவதற்காக முயற்சியில் எந்த ஒரு தமிழ்த்தேசிய கட்சிகளும் கடந்த 16, வருடங்களாக அக்கறை காட்டவில்லை மாறாக தேர்தல் அரசியலில் கதிரை பிடிக்கும் பதவி போட்டி அரசியலும், தனிநபர்களை முதன்மைபடுத்தும் கட்சி அரசியலுமே தொடர்வதுதான் தமிழ்மக்களுக்கான சாபக்கேடு.
இந்திய பிரதமருக்கு ஈழத்தமிழர்களுடைய அரசியல் தீர்வு விடயம் தெரியாமல் இல்லை விடுதலைப்புலிகளின் ஆயுதப்போர் பலம் உள்ள காலம் தொட்டு போர் மௌனித்த கடந்த 16, ஆண்டுகளாக பலதடவை இப்போது இரண்டு அணிகளாக பிரிந்து தமிழ்நாட்டிலும், இந்திய தூதுவருடனும் உரையாடப்படும் விடங்கள் கூறப்பட்டும் இதுவரை பாரதநாடும் ஈழத்தமிழர்களின் விடயத்தில் அக்கறை காட்ட வில்லை செவிடன் காதில் ஊதிய சங்காகவே காலம் கடந்ததே வரலாறு. மக்களை ஒன்றாக திரட்டி பலமான சக்தி யாக மாற்றாதவரை இதுவும் கடந்து போகும்.



