பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கையே முன்னுரிமைக்குரிய முதல்நாடு- இந்திய தூதரகம்

பாதுகாப்பு விவகாரங்களில் முதலாவது முன்னுரிமைக்குரிய நாடு இலங்கை என இந்தியா வர்ணித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் 70வருட நிகழ்வுகளில் இந்திய விமானப்படை கலந்துகொள்வது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கான இந்திய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிகழ்வுகள் வரும் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளன,இதனை குறிக்கும் வகையில் மார்ச் மூன்றாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை விமானப்படையினரின் வான்வெளி சகாசநிகழ்வுகள் இடம்பெறவுள்ளன
இந்த நிகழ்வில் இலங்கை இந்தியாவை சேர்ந்த 23 விமானங்கள் பங்கெடுக்கவுள்ளன.
வான்வெளி சாகசநிகழ்வில் ஈடுபடுவதற்காக இந்திய விமானப்படையின் விமானங்கள் இலங்கை வந்துள்ளன.
இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் பாதுகாப்ப விவகாரங்களில் இலங்கையே முன்னுரிமைக்குரிய முதல்நாடு என தூதரகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு துறைகளில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை இலங்கைக்கான விஜயத்தின் போது இந்தியாவின் தேசிய பாதுகாப்பின் ஆலோசகர் அஜித் டோவல் இலங்கைக்கான சமீபத்தை விஜயத்தின் போது வலியுறுத்தினார் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்தியா இலங்கைக்கும் அவர்களது படையினருக்கும் இடையிலான பல ஆண்டுகால நெருக்கமான தொடர்பின் அடிப்படையிலும் இந்திய விமானப்படையும் கடற்படையும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளன வான்வெளி சாகசநிகழ்வுகளில் ஈடுபடவுள்ளன என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நவீன ஹெலிக்கொப்டரான சராங் விமானமான சூர்ய கிரன் டெஜாஸ் போர் விமானங்கள் பயிற்சி விமானங்கள் டோர்னியர் கடலோர கண்காணிப்பு விமானங்கள் ஆகியன இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வான்வெளி சாகசங்களை நிகழ்த்தவுள்ளன.
இந்திய விமானப்படையின் கடற்படை பல்வேறு வகையிலான விமானங்கள் ஹெலிக்கொப்டர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமை இருநாடுகளின் இடையிலான நட்பின் வெளிப்பாடு எனவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.