பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அசீம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன் இரு நாடுகளின் எல்லையில் போர் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அசீம் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக இருக்கும் நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்தத் தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



