பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம் என தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்பயங்கரவாத தடைச்சட்டத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட கட்சியே தற்போது ஆட்சியில் உள்ளது என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒழிப்பதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அதை ஆரைவதாகக் கூறி பல்வேறு குழுக்களை அமைத்து காலத்தை இழுத்தடிக்கும் யுக்தியை அரசாங்கம் கையாண்டு வருகிறது. இச் சட்டத்தை மீளப்பெற்றாலும் அதே போன்றதொரு ஒடுக்குமுறை சட்டத்தை கொண்டுவருவோம் என்று அரசாங்க தரப்பில் சிலரால் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அதேபோல் நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப்பெறப்படும் என்று சொல்லப்பட்டாலும் அது தொடர்ந்து அமுலிலேயே உள்ளது.
இந்தச்சூழலில் மக்கள் பேரவைக்கான இயக்கம் உட்பட பல்வேறு வெகுசன அமைப்புக்கள் மனித உரிமை ஆரவலர்கள் அரசியல் கட்சிகள் இணைந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதற்கும் இதேபோன்றதொரு ஒடுக்குமுறைச் சட்டம் மீண்டும் கொண்டுவரப்படாமல் தடுக்கவும் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளன. அது தொடர்பில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது
அந்த செய்தியாளர் மாநாட்டில் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம் என அரசாங்கத்திற்கு பரிந்துரைததை தொடர்ந்து ரணில் ராஜபக்ச அரசாங்கம் மாற்று சட்டத்தை கொண்டுவர முயன்றது.அந்த நேரம் கூட இந்த அரசில் உள்ள கட்சிகள் ஜேவிபி உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக நின்றார்கள்.
இந்த சட்டத்தை 1979ம் ஆண்டு கொண்டுவந்தது தமிழ் மக்களிற்கு எதிராகஇதமிழ் மக்களின் செயற்பாடுகளிற்கு எதிராக.
1984 ஆண்டுதான் முதன் முதலில் சிங்கள இளைஞர்களிற்கு எதிராக பயன்படுத்தினார்கள் தெணியாயவில்உள்ள ஜேவிபி முகாமில் இருந்த இளைஞர்களை கைதுசெய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தினார்கள்.
ஜேவியின் பல பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கட்சிதான் தற்போது ஆட்சியில் உள்ளது.
அவர்கள் திருப்பி மாற்றுசட்டத்தை கொண்டுவருவதற்காக முன்வைக்கின்ற காரணங்களை ஏற்றுக்கொள்வது எப்படி என தெரியவில்லை.
தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றார்கள் இன்றும் கூட ( 28-5-25) கிளிநொச்சியில் வாசுகி வல்லிபுரம் என்கின்ற செயற்பாட்டாளர் வீட்டிற்கு சென்ற பொலிஸார் 31ம் திகதி விசாரணைக்காக வருமாறு தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் இவ்வாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு அதற்கு மாற்றீடான சட்டத்தை கொண்டு வரமுயல்கின்றது – நாங்கள் சொல்கின்றோம் பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் அதற்கு மாற்றீடான சட்டமும் வேண்டாம்.தெரிவித்துள்ளார்.



