ஐஎஸ்ஐஎஸ் (ISIS) மற்றும் அல்கொய்தா (Al-Qaeda) அமைப்புகளை இலங்கையில் வியாபிப்பதற்கு பங்களித்த மற்றும் நிதியுதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் 15 சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இதற்கான 15 முறைப்பாடுகளை பயங்கரவாத விசாரணை பிரிவு தாக்கல் செய்துள்ளது. குறித்த சந்தேகநபர்களுள் ஒருசிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத விசாரணை பிரிவு மூலம் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொண்ட நீதவான் விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளார்.