பத்து வருடங்களில் வங்கிகள் காணாமல் போய்விடும்

கிரிப்போகரன்சி எனப்படும் புளொக்செயின் நாணயங்க ளின் பயன்பாடுகளின் செல்வாக்கு இன்னும் 10 வருடங்களில் வங்கிக ளின் செயற்பாட்டை முற்றாக முடக்கிவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்பின் மகன் எரிக் ட்றம்ப் கடந்த புதன்கிழமை(30) தெரிவித்துள்ளார்.
கிறிப்போ நாணயம் மிகவும் இலகுவான பணப்பரிமாற்ற முறையாக மாறி வருகின்றது. தற்போதைய வங்கி முறை மிகவும் மெதுவாகவும், வினைத்திறனற்றும் உள்ளது. வங்கிகளின் செயற்பாடு உடைந்துவிட்டது. அது செலவு மிக்கதாகவும் உள்ளது. எமது வங்கிகள் செல்வந்தர்களுக்கு ஆதரவாகவே உள்ளன. பெரும்பாலான சாதாரண மக்களுக்கு எதிரான ஆயுதங்களாகவே அவை பயன் படுத்தப்படுகின்றன.
மத்திய வங்கியினால் கட்டுப்படுத்தப்ப டும் பணப்பரிமாற்றம் என்பது மக்களிடம் இருந்து வங்கிகள் பணம் சம்பாதிக்கும் ஒரு முறையாகும், அதில் இருந்து விடுபட்டால் மக்கள் கட்டணம் இன்றி இலகுவாக பணப் பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என கிறிப்போ நாணய வர்த்தகரான அவர் சி.என்.பி.சி செய்தி நிறுவனத்திற்கு மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அவர் American Bitcoin என்ற பிற்கொயின் கனிமவள அகழ்வு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்பின் குடும்பத்தினர் கிறிப்போ நாணயத்தில் தமது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகின்றனர். சுயாதீன பணப்பரிமாற்ற முறை என்பது அவர்களின் இலக்காக உள்ளது. கிறிப்போ நாணயத்தின் தலைநகராக அமெரிக்காவை மாற்றப்போவதாகவும், கிறிப்போ நாணயத்தின் அரச தலைவராக தான் இருக்கப்போவதாகவும் வெள்ளைமாளிகையில் பதவியேற்ற பின்னர் ட்றம்ப் தெரிவித்திருந்தார்.