‘பட்டலந்த’ அறிக்கை தமிழர் தேசத்தின் எழுச்சிக்கான துருப்பு : விதுரன் 

குறிப்பு: ‘உள்ளுராட்சித் தேர்தலுக்காக பட்டலந்த ஆணைக்குழுஅறிக்கையை கையி
லெடுத்துள்ள அநுர அரசு அதற்கான பொறுப்புக்கூறலை  உறுதிப்படுத்தாத பட்சத்
தில் தமிழர்களுக்கான நீதி வழங்கும் செயன்முறையில் ஐ.நா. மனித உரிமை
கள் பேரவையில் முன்மொழிந்துள்ள ‘உள் நாட்டு தேசிய பொறி முறை’ படுதோல்வி அடையும்’
“1970-1980களில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் விவசாயிகளி ற்கு  வழங்குவதற்கான யூரியாவை உற்பத்தி செய் வதற்கான மிகப்பெரிய முதலீடாக சப்புகஸ்கந்த யூரியா தொழிற்சாலை திட்டம் முன்னெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.” “அப்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலை மையிலான சிறிலங்காஅமைச்சரவையில் தொழில் அமைச்சராக பதவி வகித்தவர் ரணில் விக்கிரமசிங்க. அவர் மேற்படி திட்டத்தில் ஈடுபாட்டைக் கொண்டிருக்கவில்லை. தொழிற்சாலையின் இயந்திரங்களையும், உதிரிப்பாகங்களையும் திட்ட மிட்டு பழுதடையச் செய்து அவற்றை பழைய இரும்புகளிற்கு விற்பனை செய்தார்”
“அதன்பின்னர் அப்பகுதியில் காணப்பட்ட அரசாங்க வீட்டு தொகுதிகளை தனது கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருந்த ரணில் விக்கி ரமசிங்க அவற்றை தனது  அரசியல் தேவைகளிற்காக பயன்படுத்தினார். இதில் தொழிற்சாலையொன்று ஒட்டுமொத்த சித்திரவதை முகாமாகவும் பயன் படுத்தப்பட்டது” “இதனை உறுதிப்படுத்துவதற்காக பட்ட லந்த பகுதியில் இருந்த சித்திரவதை முகாமிற்கு திட்டமிட்டவாறு மிகக் கவனமாக நுழைந்தோம். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று பார்த்தோம். தொழிற்சாலைக்குள்ளும் சென்றுபார்த்தோம்”
“அவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்தி ‘ராவய’ என்ற பத்திரிகையில்  ‘கோட்
சூட் அணிந்த தலைவரின் வதை முகாம்’ என்ற தலைப்பில் வெளியிட்டோம். அந்த அறிக்கை
யிடலின் காரணமாக, அப்போதிருந்த ஜனாதிபதி சந்திரிகா பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் ஆராய்வதற்கானஆணைக்குழுவொன்றை நியமித் தார்”“அந்த ஆணைக்குழு விசாரணைகளைச் செய்தது. அறிக்கையை தயாரித்தது. அதற்கிடையில் களஆய்வு செய்த என்னை சந்திரிகா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கவும் அறிவுறுத்தினார்.
அச்செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டது. ஈற்றில் சந்திரிக்கா ஆணைக்குழு அறிக்கையை தனது மாளிக்கைக்கு கொண்டு சென்று அரசியலு க்கு பயன்படுத்தினார். நாம் அமைதியாக வேடிக்கை பார்க்கும் அவலம் ஏற்பட் டது”இவ்வாறு ஓரிரு நிமிடங்கள்  மூச்சுவிடாது தனது அனுபவத்தை ஆக்ரோ ஷமாக வெளிப்படுத்தி நிறுத்தினார் சிரேஷ்ட ஊடகவி யலாளர் நந்தன வீரரத்ன. பட்டலந்த சம்பந்தமாக தாக்கம் செலுத் திய புலனாய்வு ஊடகவியலாளராக இருக்கின்றார் அவர்.
அர்ப்பணிப்பான தனது அறிக்கையிடலுக்கு பொறுப்புக்கூறப்படவில்லை என்பது ஒருபுறமிருக்
கையில் பிற்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானவேளை பட்டலந்த விடயத்தினை அறிக்கையிட்டமைக்காக வெட்கி தலைகுனியும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், அவரது பொறுப்புக்கூ றலை உறுதி செய்யும் வேட்கை தணியவில்லை. ஜனாதிபதியாக ரணில் இருக்கையில், ‘பட்டலந்தவுக்கு தீவைத்தோம்’ என்ற நூலை எழுதினார். அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. குறித்த நூல் அல்-ஜசீராவின் புகழ்பூத்த ஊடகவியலாளர் மஹ்தி ஹசனின் கைகளுக்குச் சென்றது. அதனடிப்படையில் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான நேர் காணலின்போது அவரை நோக்கிய பட்டலந்த  குறித்து துல்லியமான கேள்விக்கணைகள் எறியப் பட்டன.
அதற்குப் பதிலளித்த, ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்த ஆணைக்குழுவின்அறிக்கையில் தான் குற்றவாளியாகப் பெயரிடப்படவில்லை என்றும், அந்தஅறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்
படாமையால் அதனை ஏற்றுக்கொள்ளப்போவ தில்லை என்றும் குறிப்பிட்டார்.
அக்கூற்றுக்கள் பூதாகாரமாக மேலெழவும், சித்திரவதை முகாமில் சிக்கித்தவித்தவர்களின் நீட்சியாக ஆட்சியில் இருக்கும் அநுரகுமார உள் ளிட்ட அவரது சகபாடிகள் குறித்த அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்தார்கள்.
சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, 206பக்க அறிக்கையைசமர்ப்பித்து உரை
யாற்றுகையில், அறிக்கை குறித்து இரண்டு நாள் விவாதத்தை நடத்துவதெனவும், அதன்பின் னர் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கையை அனுப்பி சட்டநடவடிக்கைளை முன்னெடுக்கவுள் ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அமைச்சர் பிமல் ரத்நா யக்கவின் உரையை அக்கிராசனத்தில்கேட்டுக்கொண்டிருந்த சபாநாயகர் வைத்தியர் ஜெகத் விக்கிரமரத்ன உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வும் அரங்கேறியது.
அதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்க, பட்ட லந்த ஆணைக்குழு அறிக்கையை அதிராகரிப்
பதாக அறிவித்தார். ஆளும் தரப்பினர் ரணிலின் குடியுரிமை கூட பறிக்கப்படலாம் என்கின்ற
னர். இவ்வாறு வாதப்பிரதிவாதங்கள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.
28வருடங்களுக்குப் பின்னர் பட்டலந்த அறிக்கை சீர்த்தூக்கப்பட்டமைக்கு அல்-ஜசீராவில் ரணில் வழங்கிய நேர்காணல் தான் அடிப்படையில் காரணமாக இருக்கின்றது.  ஆனால், அநுர தலைமையிலான ஆளும் தரப்பு தோழர்கள் குறிப்பிடுவதுபோன்று ரணில் விக்கிரமசிங்கவை சட்டத்தின் முன்பு நிறுத்த முடியுமா என்ற கேள்விகள் இங்கு எழுகின்றன.
ஏனென்றால் முதலில் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டதன் பின்னர் அதன்மீது விவாதம் நடத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கான பிரேரணையுடன் தீர் மானம் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடைய அரசாங்கம் என்பதால் அதனைச்செய்வதில் பிரச் சினை இருக்காது. ஆனால் அரசியலமைப்பின் 48 ஆவது பிரிவின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட பொதுவானதொரு ஆணைக்குழுவாகவே பட்டலந்த ஆணைக்குழு  காணப்படுவதால் அதன் அறிக்கையை மையப்படுத்தி தற்போதைய நிலை
யில்  பாராளுமன்றத்தில் ‘சபை ஒத்தி வைப்பு’  வேளை விவாதத்தை மட்டுமே நடத்த முடியும்  என்பது ஒழுங்கு விதியாகவுள்ளது.
அதுமட்டுமன்றி, சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்க பட்டலந்த வில் இரண்டு வீடுகளை வழங்கியமை சட்டத்திற்கு முரணானது என்று 119 ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்  பட்டலந்த   விவகாரத்துடன் மறைமுகமாக அவர் தொடர்புப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே தவிர அந்த அறிக்கையில் ரணிலுக்கு எதி ராக குற்றச்சாட்டுக்களோ தண்டனையோ பரிந்துரைக் கப்படவில்லை என்பது முக்கியமான விடய மாகும். ஆகவே, பட்டலந்த அறிக்கையின் தற்போதைய பரபரப்புக்கு காரணம், குட்டித் தேர்தலே. மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள 336 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை சாதகமான நிலைமையில் எதிர்கொள்வதற்காக அநுர தரப்பு பயன்படுத்தப்போகும் கருவியே பட்டலந்த அறிக்கை.
அதுமட்டுமன்றி, உள்நாட்டில் ஏற்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்புக்களின் துப்பாக்கிப்பிரயோகம், விலைவாசி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிர்மறையான அலையை தணிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதமே பட்டலந்த அறிக்கையாகும்.
அந்தவகையில், பட்டலந்த அறிக்கையா னது, வெறும் ‘அரசியல் மாயமானாகவே’ இருந்து விடப்போகின்றது என்பதை அடுத்துவரும் நாட்களில் கண்கூடாகவே உணர்ந்து கொள்ள முடியும்.  இந்தப்புரிதல் முதலில் தமிழ்த் தரப்புக்கே அவசியமாகின்றது. அப்புரிதலினடிப்படையில் தமிழ்த் தரப்பு அரசாங்கமே கையிலெடுத்து பட்டலந்த அறிக்கையை மையப்படுத்திய நகர்வை தன்னின விடுதலைக்கான பயணத்தில் இழைக்கப்பட்ட ஒட்டுமொத்த மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்கான பொறுப் புக் கூறலுக்காக பயன்படுத்துவதற்கான காய் நகர்த்தல்களையே செய்ய வேண்டியுள்ளது.
குறிப்பாக, தமிழினத்தை மையப்படுத்திய அழிப்புகளுக்கும் சித்திரவதைகளுக்கும், காணா
மலாக்கப் படுதல்களுக்குமாக சிறிலங்காவின் கடந்தகால ஆட்சியாளர்கள் காலங்கடத்துவதற் காகவும் கண்துடைப்புக்காவும் அழுத்தங்களை சமாளித்துக் கொள்வதற்காகவும் ஆணைக்குழுக் களை அமைத்தார்கள்.
மஹிந்த ராஜபக்ஷவின் 2005-2010 ஆண்டு வரையிலான முதலாம் ஆட்சிக்காலத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி நிஷங்க உதலாகம தலைமையில் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து இடம்பெற்ற 5மாணவர்கள் படுகொலை, மூதூர் தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை உட்பட 16 சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு அந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டது. பின்னர் போர் வெற்றியுடன் அரியாசனம் ஏறிய மஹிந்த ராஜபக்ஷவின்இரண்டாவது ஆட்சிக்காலத்தில் 2002 சமாதான பேச்சுவார்த்தை முதல் 2009 மே இறுதிக் கட்டப் போர் வரை நடந்த நிகழ்வுகளையும் தோல்விகளையும் முரண்பாடு களையும் விசாரணை செய்து ‘மீள நிகழாமையை’ தடுப்பதற்காக 2010ஆம் ஆண்டில் மே மாதம் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குநியமிக்கப்பட்டது.
அடுத்து, 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அது 2014 ஆம் ஆண்டு ஜூலை வரை விசாரணைக்கான காலம் விரிவுபடுத்தப்பட்டது.
இவற்றைவிடவும், சர்வகட்சிக்குழுக்கள், ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புக்களும் அவ்வப்போது நிறுவப்பட்டே வந்தது. ஆனால் தற்போது வரையில் நிகழ்ந்தது ஏதுமில்லை. குறித்தஆணைக்குழுக்களின் அறிக் கைகள் வெற்றுக் காகிதங்களாகவே இருக்கின்றன.
அந்தவகையில், தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பின் வடிவங்களாகவுள்ள பல சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பாராளுமன்றில் சமர்ப்பிக்குமாறும் அப்பரிந்து ரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அநுர அரசாங்கத்தினை வலியுறுத்த முடியும்.
அதற்கு அநுர அரசாங்கம் இயங்காத பட்சத்தில் அவ்விடயத்தினை மையப்படுத்தி தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் தேர்தல் முடிவுகளின்பின்னர் வலுவிழந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்த முடியும்.அடுத்ததாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58,59ஆம் அமர்வுகளில் தீர்மானங்களையும், வாய்மொழி அறிக்கைகளையும் முழுமையாக அநுர அரசாங்கம் நிராகரித்துள்ளதோடு, ‘உள்நாட்டு தேசியபொறி முறையை’ பொறுப்புக்கூறல் செய்வதற்காக முன்மொழிந்துள்ளது.
பட்டலந்த விடயத்தில் ‘உள்நாட்டு தேசிய பொறிமுறை’ நடைமுறைச் சாத்திய மற்றுப் போகும்சமயத்தில் அதனைப் பயன்படுத்தி தமிழ் மக் களுக்கான பொறுப்புக் கூறலைச் செய்வதற்கான சர்வதேசத்தின் அதியுச் சமானஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்கான காய்களை நகர்த்த முடியும்.
அதுமட்டுமன்றி, பட்டலந்த அறிக்கையை மையப்படுத்திய அரசாங்கத்தின் செயற்பாடு களை முறையாக கணித்து தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில்அமைப்புக்களும் காய்களை நகர்த்தினால் உள்நாட்டில் தமிழ் மக்களின் தாயகத் திரட்சியுடனான தேச எழுச்சிக்கு வித்திடுவ தாக இருக்கும்.