கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பினார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் (11) கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.