நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் ஆதரவளிக்க தயார்: நாமல் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி கூறுவது போன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் அதற்கு முழு ஆதரவை வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கான சிறந்த நேரம் நெருங்கிவிட்டதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.