நிபந்தனையற்ற போர் நிறுத்தம் – ஐ.நாவில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்

கடந்த 14 மாதங்களாக காசாவில் இடம்பெறும் போரை நிபந்தனையற்ற போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரும் தீர்மானம் ஒன்று கடந்த புதன் கிழமை(11) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் நிறை வேற்றப்பட்டுள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரே லிய படைகளுக்கு இடையிலான உடனடியான, நிரந்தர மற்றும் நிபந்தனையற்ற இந்த போர் நிறுத்தம் தொடர்பான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 158 நாடுகள் வாக்களித்துள்ளன. 12 நாடுகள் வாக் கெடுப்பை புறக்கணித்துள்ளன, 9 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. கைதிகள் நிபந்தனைகளின்றி விடு தலை செய்யப்படவேண்டும் என வும் அதில் கோரப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு தீர்மானம் கடந்த மாதம் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்டபோது அதனை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரித்திருந்தது. தற் போதைய தீர்மானத்தையும் தேவையற்றது மற்றும் தவறானது என ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் வூட் தெரிவித்திருந்தார். லெபனானில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டு ஹமாஸ் அமைப்பு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவது அவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 மாதங்களாக காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் 45,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களும் பெண்களுமாவார்கள்.