இலங்கையின் பெரும்பான்மை ஆட்சி அதி காரத்தினை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்த லுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் படையெடுத்துவரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தமிழ் பகுதி களுக்கும் தமது விஜயங்களை சிங்கள ஜனாதி பதிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் முன் னெடுத்துவருகின்றனர்.
இலங்கையில் கடந்த 50 வருடத்திற்கு மேலாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்கள், இருப்புகள் அழிக்கப் பட்டு இந்த நாட்டில் தீண்டத்தகாத சமூகமாக சிறுபான்மை சமூகத்தினை நோக்கும் பெரும் பான்மையினத்தவர்கள், தேர்தல் காலங்களில் மட்டும் தமது கரங்களை நீட்டி தமது கோர முகத்தினை மறைக்கும் நிலைமையே தொடர்ச்சி யாக காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் கள், காணி அபகரிப்புகள், வளச்சுரண்டல்கள், மனித உரிமை மீறல்கள் என அனைத்து வகையான எதிர்ச்செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் சிங்கள பேரினவாத சக்திகள் தேர்தல் காலங்களில் மட்டும் நல்லிணக்கம், சமத்துவம், அரசியலமைப்பு திருத்தம், 13வது திருத்த சட்டத்திற்கு மேலதி கமாக, காணி விடுவிப்பு, தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு என பல்வேறு போலி கோசங்களை நாங்கள் காலத்திற்கு காலம் பார்த்தே வருகின்றோம்.
இவ்வாறான நிலையிலேயே இந்த நாட்டில் சிங்கள ஜனாதிபதியை தேர்வு செய்வதற் கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் பல்வேறு வகையான கருத்தாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வடக்கு கிழக்கு நோக்கியும் படையெடுப்புகள் இடம்பெற்று வரு கின்றன.
வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், தமிழர்கள் தமது தாயகத்தில் சுதந்திரமாகவும் தங்களை தாங்களே ஆட்சிசெய்யும் நிலைமை யினை ஏற்படுத்தி சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக கடந்த 75வருடத்திற்கு மேலாக அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போராடி இன்று இராஜதந்திர ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைமையில் இவ்வாறான.
தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள்?அல்லது வழமைபோன்று ஏதோ வொரு பெரும்பான்மையின அரசியல்வாதியை ஜனாதிபதியாக்க துணை நிற்கப்போகின்றார்களா போன்ற பல்வேறு கேள்விகள் தொக்கி நிற்கும் நிலைமையினை இன்று காணமுடிகின்றது.
வடக்கு கிழக்கினைப்பொறுத்த வரை யில் இன்றைய நிலையில் தமிழ் தேசியம் சார்ந்த செயற்பாடுகளும் தமிழர்களின் உரிமை தொடர்பான கோரிக்கைகளும் வலுவிழந்த நிலைமையிலேயே காணப்படுகின்றன. தமிழ் தேசிய அரசியலுக்குள் ஏற்பட்டுள்ள போட்டிக ளும் பதவிகளுக்கான மோதல்களும் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படும் சிவில்சமூக செயற் பாட்டாளர்களின் ஆளுமையற்ற போக்குகளும் இன்று தமிழ் தேசியமும் தமிழர் சார்ந்த உரிமை விடயங்களும் வலுவிழப்பதற்கு காரணமாக அமைந்துவருகின்றன.
இதேபோன்று இன்று வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தேசிய உரிமை போராட்டத்தினையும் தமிழ் தேசியம் சார்ந்த செயற்பாடுகளையும் பலவீனப்படுத்துவதற்காக இலங்கை பௌத்த பேரினவாத சக்திகளி னால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அந்த வேலைத்திட்டங்கள் முறையான வகையில் செயற்படுத்துவதற்காக பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளும் தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசிய போர்வையினை போர்த்திக்கொண்டு களமிறக்கப்பட்டுள்ளமையும் எமது விடுதலைப் பயணத்தின் சறுக்கல் நிலைமைகளுக்கான காரணமாக அமைகின்றன.
இந்த நிலைமையிலேயே இன்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயமும் முன்னிறுத் தப்படுகின்றது. இந்த தமிழ் பொது வேட்பாளர் கோசம் என்பது இன்றைய நிலையில் தமிழர்களுக்கு மிக முக்கியமான விடயமாக கருதப் பட்டாலும் அதனை எவ்வாறு முன்கொண்டு செல்லவேண்டும் என்ற நிலை தெரியாதவகையில் சிவில் சமூகத்தினரின் நிலையுள்ளது.
வடக்கு கிழக்கு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை இந்த நாடும் சர்வதேசமும் அங் கீகரிக்கவேண்டும் என்பது தொடர்ச்சியான கோரிக்கையாகும். இந்த கோரிக்கையினையாவது முன்னிறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கி தமிழர்கள் தமது கோரிக்கையிலும் தமது நிலைப்பாட்டிலும் உறுதியாகவுள்ளனர் என்பதை வெளிப்படுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளபோது அதனை நிறைவேற்ற முடியாத நிலைமையினை எதிர்கொண்டுள்ளதை காணமுடிகின்றது.
கடந்த காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டபோது அதற்கான குரல்கள் மிகவும் குறைந்தளவிலேயே ஒலிக்கும் நிலைமையினை காணமுடிகின்றது.குறிப்பாக கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள் ளும் பிரச்சினைக்கு அந்த பகுதி மக்கள் குரல் கொடுக்கும் நிலைமையே காணப்படுகின்றது.
குறிப்பாக மைலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு இன்று வரையில் தீர்வு முழுமையாக கிடைக்காத நிலை யில் அதற்காக பண்ணையாளர்கள் மட்டுமே போராடும் நிலைமையே உள்ளது. .வடகிழக்கு தமிழர்களுக்கு அநீதிகள் ஏற்படும்போதும் தமிழர்க ளுக்கு எதிரான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுத்தபோதும் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் ஒளிந்திருந்தவர்கள் இன்று பொது வேட்பாளர் தொடர்பில் பேசும் நிலைமைகள்தான் இன்று பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களுக்கான அநீதிகள் நேரும் போது குரல்கொடுக்காதவர்கள் இன்று தமிழர்களின் விடயத்தில் நிலையான தீர்வு வேண்டும் என்பதற்காக பொதுவேட்பாளரை களமிறக்கு கின்றோம் என்று கூறுவது தமிழர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமாக காணப்படுகின்றது.
இந்த சந்தேகங்களை போக்காமல் அல்லது தெளிவுபடுத்தாமல் தமிழ் பொதுவேட்பாளர் என்பது தமிழ் மக்களின் கோரிக்கைகளை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடுகளாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
அதாவது தமிழ் பொதுவேட்பாளர் கோரிக் கைக்கு தமிழ் மக்கள் அங்கீகாரம் வழங்காவிட்டால் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை கோரிக்கையினை நிராகரித்து சிங்கள மக்களுடன் வாழவே விரும்புகின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்கு சிங்கள பேரினவாத சக்திகள் கூறுவதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுக்கும். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமனால் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் முற்றுமுழுதான சிங்கள மயப்படுத்தலுக்குள்ளாகும் நிலைமை ஏற்படும்.
இவ்வாறான நிலையிலேயே தமிழ் பொதுவேட்பாளர் விடயம் என்பது தமிழ் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட்டு பிரகடனப்படுத் தப்படவேண்டும். அதனை விடுத்து அரசசார் பற்ற நிறுவனங்களிலும் பல்வேறு அமைப்புகளி லும் ஆட்கள் திரட்டுவோர், கூட்டம் சேர்ப்போரைக்கொண்டு கூட்டங்கள் நடாத்தி அதனை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதனால் நிச்சயமாக தமிழ் மக்களின் ஆதரவினைப்பெற்றுக்கொள்ளமுடியாது.
பொங்கு தமிழ் போன்ற விடயங்களை செய்து அதனை மக்கள் பயப்படுத்தி செய்வதன் மூலமே தமிழ் மக்கள் மத்தியில் பொதுவேட்பாளர் தொடர்பிலான எழுச்சியை ஏற்படுத்தமுடியும். அண்மையில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்திற்கான தெளிவூட்டல் செயலமர்வு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் 100க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாகவும் கிழக்கில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தளம் அதிகரித்து வருவதாகவும் பல்வேறு ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளிவந்ததையும் காணமுடிந்தது. ஆனால் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படத்தில் உள்ளவர்களை பார்த்தால் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் எந்தவித உரிமை ரீதியான போராட்டங்களிலும் வேலைத் திட்டங்களிலும் ஈடுபடாதவர்களாகவும் ஆனால் அரசசார்பற்ற நிறுவனங்களிலும் செயற்பாடுகளி லும் ஈடுபட்டவர்களாவும் உள்ளனர்.
இவ்வாறான நிலைமைகள் மாற்றப்பட்டு உளப்பூர்வமாக பொதுவேட்பாளர் தெரிவு என்பது இடம்பெற்று அதனை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.அதற்கான முன்னெடுப்புகளை தமிழ் தேசிய பரப்பில் உண்மையாக செயற்படும் பற்றாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.இதன்மூலமே தமிழ் மக்கள் இவ்வாறான விடயங்களை ஆதரிக்கும் நிலைமை ஏற்படுவதுடன் அதன் மூலம் தமிழர்களின் வலுவான கட்டமைப்பு சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லப்படும்.இதனை எதிர்கால செயற்பாடுகளாக கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.