நந்திக்கடல் உலகின் போராடும் தேசிய இனங்களின் வழிகாட்டி

புவிசார் அரசியலையும், அரச பயங்கரவாத உலக ஒழுங்கையும் மட்டுமல்ல அதற்கு எதிரான நந்திக்கடல் கோட்பாட்டையும் புரிந்து கொள்ள இந்தப் படம் உங்களுக்கு உதவலாம்.

ஐஎஸ்ஐஎஸ் ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக குர்து போராளிகளுக்கு ஆதரவளித்துவிட்டு இன்று அவர்களை படுகொலை களத்தில் நிறுத்திவிட்டு துருக்கியின் இன அழிப்புக்கு மறைமுக ஆதரவளித்துவிட்டு அமெரிக்கா விலகியது மட்டுமல்ல அதே ஐஎஸ்ஐஎஸ், குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி/ அமெரிக்க ஆதரவுடன் இன்று களத்தில் நிற்கிறார்கள்.

இதுவே நந்திக்கடல் கோட்பாடுகளின் மைய உள்ளடக்கம்.

இந்தியப் படைகளுக்கு ஏன் தலைவர் கட்டுப்படவில்லை? , பிராந்திய – மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணியாமல் 2005 இல் ரணிலை தோற்கடித்து ஏன் மகிந்தவை வெல்ல வைத்தார்?, 2009 இல் மக்களை மீட்கச் சொல்லி அமெரிக்காவிடம் கேட்க ( இதுவே புலிகள் தங்களை காப்பாற்ற அமெரிக்க கப்பல் வரும் என்று நம்பியதாக உள்ள வதந்தி) அதற்கு புது மாத்தளன் பகுதியில் கடற்படை தளம் அமைக்கும் கோரிக்கையுடன் உள் நுழைய முயன்ற அமெரிக்க கோரிக்கையை தலைவர் நிராகரித்த கதையின் அனைத்துப் பின் புலமும் இன்று குர்து மண்ணில் நடக்கிறது/ நிரூபிக்கப்பட்டுள்ளது.

1987 இலும் சரி 2009 இலும் சரி தலைவர் சிறிதளவு தடுமாறியிருந்தாலும் தமிழர் தேசம் இந்திய, அமெரிக்க,  ஒட்டுக் குழு படைகளால் பங்கு பிரிக்கப்பட்டு தமிழர் இறைமை நிர்மூலமாக்கப்பட்டிருக்கும்.

இதன் வழி தமிழர் தேசத்தை மட்டுமல்ல சிங்கள தேசத்தையும் சேர்த்தே தலைவர் காத்தார் என்பதே உண்மை.

தலைவர் தூர நோக்குடன் இந்த இனத்தின் இறைமையை யாருக்கும் அடகு வைக்காமல் தக்க வைத்து விட்டுச் சென்றதனால்தான் நந்திக்கடல் உலகின் போராடும் தேசிய இனங்களின் வழிகாட்டியாக , கோட்பாடாக வரலாற்றில் நிற்கிறது.

-பரணி கிருஸ்ணரஜனி