உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக்காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை தனது சட்டதிணைக்களத்திற்கு முதலில் அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாங்கள் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுப்போம்என தெரிவித்துள்ள ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க எனினும் முதலில் அந்த கூற்றினை சட்டதிணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் என்ன தெரிவித்தார் என்பதை அறிவது முதலில் அவசியம்இதன் காரணமாக அதனை சட்டபிரிவிடம் சமர்ப்பிக்கவேண்டும்பிரதமரின் கூற்று எந்த வகையில் சட்டத்தை மீறியுள்ளது என்பதை ஆராயவேண்டும்பிரதமரின் அறிக்கையில் தேர்தல்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.