எதிர்வரும் காலங்களில் புதிய அரசியலமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்படும்
இதன் மூலம் இந்நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கும் என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் நிச்சயமாக நமது நாட்டின் அரசியலமைப்பின்படி செயல்படுகிறோம். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதே எமது நோக்கமாகும். தேர்தல் விஞ்ஞாபனங்களில் இதுதொடர்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
எதிர்காலத்தில், குறிப்பாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், உலகில் உருவாகியுள்ள புதிய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சரத்துகளை உள்ளடக்கி மக்களின் அங்கீகாரத்தை பெறும் நோக்கில் நாமும் பயணிக்க உள்ளோம். . அதுதான் எங்கள் அரசின் நிலைப்பாடு” என்றார்.
இதேவேளை, இந்திய விஜயத்தின் போது அரசியலமைப்பு அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக அழைக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு உள்ளூராட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளதோடு, மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் இதுவரை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை.
இதனையடுத்து, உரிய முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.