தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு புள்ளிவிபர வலைத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 டொலர் அல்லது வாடகையைத் தவிர்த்து 153,899 ரூபாய் செலவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தரவுகளின்படி, கொழும்பு நகரில் வசிக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசதியாக வாழ்வதற்கான வாடகையைத் தவிர்த்து மாதாந்த செலவு 570,997 ரூபாய் ஆகும்.
இதில் குழந்தை பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், சுற்றுலா, உணவு, பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள், வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாலைத்தீவு ஒரு நபருக்கு 840.4 டொலர் செலவில் வசதியாக வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த தெற்சாசிய நாடாகக் பெயரிடப்பட்டுள்ளது.
