தென்னாசியாவின் படைவலுச் சமநிலை மாறுமா? – வேல்ஸில் இருந்து அருஸ்

ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை பாகிஸ்தான் மீது கடந்த புதன்கிழமை(6) காலை ஒரு மணியளவில் இந்தியா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் 9 இடங்கள் மீது இந்திய தயாரிப்பான பிரமோஸ் மற்றும் பிரான்ஸின் தயாரிப்பான Scalp deep-strike cruise ஏவுகணைகள் கொண்டு இந்தியா தாக்கியுள்ளது. சிந்தூர் நடைவடிக்கை என்ற இந்த நடைவடிக்கையில் இந்தியாவின் பலிஸ்ரிக் ஏவுகணைகள் பாகிஸ்தான் வான்பரப்பை ஊடறுத்து சென்று பாக்கிஸ்தான் வசம் உள்ள காஸ்மீர் பகுதிகளிலும், பாகிஸ்தானின் உட்பகுதியான பச்சாப் மாநிலத்திலும் வீழ்ந்து வெடித்துள்ளன.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள காஸ்மீர் பகுதியில் உள்ள 5 இடங்களும், பாகிஸ்தானின் உட்பகுதியான பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நான்கு இடங்கள் மீதும் 26 ஏவுகணைகள் வீழந்து வெடித்துள்ளன. இராணுவ மற்றும் பொதுமக்களின் இலக்குகளை தவிர்த்து தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கியதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வும், மேலும் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்தியாவின் தாக்குதல்கள் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவும், மசுதி ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை கண்டித்துள்ள பாகிஸ்தானின் அதிபர் சபாஸ் செரீப் பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பாஞ்சாப் மாநிலத்தின் மீது இந்தியா மேற்கொண்ட தாக்குதல் என்பது தனது நாட்டின் இறைமையை மீறும் செயல் என தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஐ.நாவின் சரத்து 51 இன் அடிப்படையில் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.
தனது தாக்குதலில் 80 இற்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது லஸ்கார் ஈ தொய்பா என்ற அமைப்பு பஞ்சாப் மாநிலத்தின் முறிட்கே பகுதி யில் தளம் அமைத்து இருப்பதால் இந்த பகுதி தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 31 பொதுமக்களே கொல்லப்பட்டதான பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்தியாவின் தாக்குதலின் பின்னர் காஸ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் கடும் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், அதில் 16 பொதுமக்கள் கொல் லப்பட்டுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தாக்குதல்களுக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தில் பதிலடி கொடுக் கப்படும் எனவும், இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்பு சபையில் முறையிடப்போவதில்லை எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் திருப்பி தாக்கினால் இந்த போர் அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
அதேசமயம் பாகிஸ்தானின் எப்-16, ஜே-17 மற்றும் ஜே-10 விமானங்கள் இந்தியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ் தான் படை அதிகாரியை மேற்கோள்காட்டி சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. வீழ்த்தப்பட்ட விமானங்களில் பிரான்ஸ் தயாரிப்பு 3 ரபேல் விமானங்களும், ஒரு ரஸ்ய தயாரிப்பு எஸ்யூ-30 விமானம், ஒரு பிரான்ஸ் தயாரிப்பு மிராஜ்-2000 விமானம் என்பன அடங்குவதாக தெரிவிக் கப்படுகின்றது. அதேசமயம் இஸ்ரேலிய தயாரிப்பான ஒரு உளவு விமானமும் சுட்டுவீழ்த்தப்பட்டுள் ளது.
இந்த செய்தி குறித்து பல ஊடகங்களும் சமூகவலைத்தளங்களும் தகவல்களை வெளி யிட்டு வருகின்றபோதும் அதனை இந்திய தரப்பு உறுதிப்படுத்தவில்லை. பிரான்சின் ரபேல் விமானங்கள் French-made MICA missiles என்னும் ஏவுகணைகளை கொண்டவை. வீழந்துள்ள விமானங்களின் பாகங்களுடன் இந்த ஏவுகணையின் பகுதிகளும் கிடப்பதாக கூறப்ப டுகின்றது எனினும் அந்த ஏவுகணைகளை மிராஜ்-2000 விமானங்களும் சுமந்து செல்ல முடியும்.
பல அனைத்துலக ஊடகங்கள் வெளியிட்ட புகைப்படங்களில் இந்திய கட்டுப்பாட்டு காஸ்மீர் பகுதியில் பெருமளவான விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடப்பதை காண முடிகின்றது. காஸ்மீர் சிறீநகர் பகுதியில் விமானம் ஒன்று பாடசாலை மீது வீழந்துள்ளதாகவும், அந்த இடத்தில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், அந்த பிரதேசம் முழுவதும் பொதுமக்கள் செல்ல முடியாதவாறு இந்திய படையினர் தடை செய்துள்ளதாகவும் அல் ஜசீரா ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜே-10சி என்ற விமானமே இந்தியாவின் 4;.5 தலைமுறை விமானமான ரபேல் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. தனது பெயரை குறிப்பிடவிரும்பாத பிரான்ஸின் புலனாய்வு அதிகாரியும் இந்த தகவலை அமெரிக்காவின் சி.என்.என் நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளார். சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளேடும் இது தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இரு தரப்பிலும் 125 இற்கு மேற்பட்ட விமானங்கள் இந்த தாக்குதலில் பங்கு பற்றி யிருந்தன. இந்திய தரப்பில் 70 விமானங்கள் பாகிஸ்தானின் எல்லைக்குள் ஊடுருவாமல் தமது எல்லைக்குள் நின்று தாக்குதல்களை மேற்கொண்டபோது, பாக்கிஸ்தானின் ஜே-17, ஜே-10 மற்றும் எப்-16 விமானங்கள் பாக்கிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து பதில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இந்த தாக்குதல்களின் போது சீனா அண் மையில் பாக்கிஸ்தானுக்கு வழங்கிய பி.எல்-15ஈ ரக வானில் இருந்து வானுக்கு ஏவும் நீண்டதூர ஏவுகணைகளை பாக்கிஸ்தான் வான்படை ஜே-10 விமானங்கள் இந்திய விமானங்கள் மீது ஏவியதால் இந்திய விமானங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன.
ரபேல் விமானங்களின் இலத்திரனியல் செயற்பாடுகளை முதலில் சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்த பின்னரே பிஎல்-15 ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் இந்தியா தன்வசம் உள்ள 36 ரபேல் விமானங்களில் 6 விமானங்களை இழந்ததாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இது தொடர்பான செய்திகளை இந்தியா தடை செய்துள்ளதால் உண்மையான
விபரங்களை அறிவது மிகவும் கடினமாக உள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது.
அண்மைக் காலங்கனில் இந்தியா சந்தித்த வான்படையின் மிகப்பெரும் இழப்பு இதுவாகும். அது மட்டுமல்லாது இந்த இழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் இந்தியாவின் ஆயுதக் கொள்வனவில் மிகப்பெரும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படலாம் என தெரிவித்துள்ளார் சீனாவின் புதிய அனைத்துலக தொடர்பகத்தின் தலைவர். அதாவது பாக்கிஸ்தான் வசம் உள்ள சீனாவின் விமானங்களை எதிர்கொள்வதற்கு இந்தியாவுக்கு ஆறாம் தலைமுறை விமானங்களான அமெரிக்கா வின் எப்-35 அல்லது ரஸ்யாவின் எஸ்.யூ-57 போன்ற விமானங்கள் தேவைப்படலாம்.
அது இந்தியாவின் படைத்துறை செல வினங்களை மேலும் அதிகரிக்கும். ரபேல் விமானம் மிக நீண்ட தொலைவில் இலக்குகளை கண்டறியும் தொழில் நுட்பம் கொண்டதாக இருந்தாலும் ஜே-10 சி விமானம் இலத்திரனியல் போர் முறையில் மிகவும் தரம்வாய்ததாக தயாரிக்கப்பட்ட விமானம் என்பதுடன், ரபேல் விமானத்தின் விலையுடன் ஒப்பிடும் போது மூன்று மடங்கு குறைவானது. மேலும் அதன் பராமரிப்பு செலவுகளும் மிகவும் குறைவு.
அதற்கு அப்பால் ஐரோப்பாவின் மிகச் சிறந்த விமானம் தென்னாசியா பிராந்தியத்தில் சீனாவின் விமானத்தால், சீனாவின் ஏவுகணைக ளால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது அந்த பிராந்தியத்தில் சீனாவின் ஆயுதங்களின் மேலாண் மையை வலுப்படுத்துவதுடன, ஒரு படைவலுச் சமநிலையில் மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.