தீவுப்பகுதியில் சீனா நிறுவனத்திற்கு அனுமதி – இந்தியாவின் கரிசனை குறித்து அரசாங்கம் ஆராய்கின்றது-ரம்புக்வெல 

யாழ்ப்பாணத்தில் தீவுப்குதியில் சீனா நிறுவனத்திற்கு மீள்சுழற்சி சக்தி திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டமை குறித்த இந்தியாவின் கரிசனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து   அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, “அமைச்சரவை இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன அவை குறித்து ஆராய்ந்துவருகின்றோம். குறிப்பிட்ட அதிகாரிகளுடன் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெறும்.
நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவில் சீனா நிறுவனம் மீள்சுழற்சி சக்தி திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டமை குறித்த இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.