அநுர தலைமையிலான கட்சி ஆட்சிக்கு வந்த பின் ஒரு தமிழராக இருக்கின்ற சந்திரசேகரன் அவர்களை தமிழர்கள் பகுதியிலே அமைச்சராக நியமித்துள்ளனர். அவர் அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பின் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றதா?
என்பிபி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் ஆட்சியில் இல்லாமல் இருக்கும் போதும், அமைச்சர் சந்திரசேகரம் வடக்கு மாகாண மீனவர்களுடைய பல போராட்டங்களில் நின்று மீனவருடைய பிரச்சனையை அறிந்தவர். வடக்கு மக்களும் ஒரு மாற்றம் வரும்போது அந்த மாற்றத்தின் ஊடாக தங்களுடைய கடலில் தாங்கள் சுதந்திரமாக தொழில் செய்து வாழ் வாதாரத்தில் ஒரு மாற்றம் வரும் என்று நம்பி இருந்தவர்கள். ஆனால் இன்றைக்கு அநுர அரசு ஆட்சிக்கு வந்து 45 50 நாள் ஆகின்றது. எதிர்பார்க்கப்பட்ட எந்தவிதமான மாற்றமும் இல்லை. இன்றைக்கு இலங்கை இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு அவர்கள் இலங்கை என்ற ரீதியில், கடந்த அரசாங்கத்தின் பாதையில்தான் பயணிக்க வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றது. ஆனால் ‘இந்த அரசாங்கத்துக்குரிய கால அவகாசம் ஒன்று தேவை. ஏனென்றால் நீண்ட காலத்துக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஒரு அரசாங்கம். அதை அறிந்து கொள்ள வேண்டும். அல்லது அதை புரிந்து கொள்வதற்குரிய கால அவகாசம் தேவை’ என்ற கருத்து வடக்கில் சொல்லப்படுகின்றது. இந்த போர்வையில் மக்கள் அந்த கால அவகாசத்தையும் மூன்று மாசமோ ஆறு மாசத் துக்கோ சரி புதுசா வந்திருக்கிறார்கள். செய்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பெரும் எதிர் பார்ப்போடு இருக்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்த அளவிலே இது சாத்தியமானதாக கூற முடியாது. உதாரணத்துக்கு கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம், அந்த பதவியை ஏற்று குறிப்பிட்ட நாட்களிலே இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மிகக் காட்டமாக பேசி வந்தார். ஆனால் தற்பொழுது அந்த காட்டம் மெத்தன போக்கை நோக்கி நகர்வதை எங்களால் அறியக்கூடியதாக இருக்கிறது. அதே போன்றுதான் கடந்த அரசாங்கங்கள் கொண்டுவந்த புதிய சட்ட திருத்தத்தை வடக்கு கிழக்கு இலங்கை ஒட்டுமொத்தமாக அந்த சட்ட திருத்தத்தைநிராகரித்தது. ஆனால் இந்த அரசாங்கம் வந்து அதனை அமைச்சரவையிலே போட்டு அங்கீகரித்திருக்கின்றது. அதற்கு ஒரு குழுஅமைத்திருக்கிறது. அது தொடர்பாக இந்த மாசம் 4ம் திகதி நாங்கள் கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கதைத்தபோது அவர், அதற்குரிய திருப்தி யான பதிலை வழங்கவில்லை. அவர் ஏற்றுமதி சார்ந்தும், வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுகின்ற கடல் உணவுகளுக்கு வெளிநாடுகளின் கோரிக்கையைஏற்றுத்தான் நடக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டிலே தான் இருந்தார். எனவே ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் கொண்டுவந்த அனைத்து சட்டங்களையும் இந்த அரசாங்கம் பாராளுமன்றத்திலே கொண்டு வந்து நிறைவேற்றத்தான் போகின்றது. ஆனால் கடற்தொழிலாளருக்கு தீர்வு கிடைக்குமா? என்பது கேள்வியே.
சந்திரசேகரனை நீங்கள் சந்தித்து பேசியதாக கூறுனீர்கள். என்ன பேசப்பட்டது?
கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடும் போது, அதிலே புதிய சட்ட திருத்தம் தொடர்பாக அமைச்சரவையிலே கொண்டுவரப்பட்டு அந்த சட்ட திருத்தம் வடக்கு கடற்றொழி லாளர்களுக்குபாதிப்பானதாக இருக்கும் என்று கூறியபோது, அவர் ஒரு கருத்தை முன்வைத் திருக்கின்றார்,
இந்த கடல் உணவுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதனால் அந்த ஏற்றுமதியாளர்களின் கருத்தைக் கேட்டும் அந்த சட்டங்களை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கின்றது என்று. அவருடைய கருத்து என்னவென்றால், அநுர அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு எப்படி வளங்களை விற்றாலும் பரவாயில்லை. எம் இனத்தை அழித்தாலும் பரவாயில்லை என்பதில் குறிக்கோளாக இருக்கின்றார். ஆனால் கடந்த காலங்களில் பலமாக இருந்து இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்தவர், எங்களோடு இருந்தவர் இந்த கடற்றொழில் அமைச்சர். ஆனால் இன்றைக்கு இருக்கிற சூழ்நிலையில் இந்த அரசாங்கம் எங்களுடைய பிரச்சினைகளை தீர்க்குமா? என்று சொன்னால் அது மிகப்பெரிய கேள்விக்குறியான ஒரு விடயமாகத்தான் இருக்கின்றது.
இந்த அரசாங்கங்களின் செயற்பாடு வெளி யில் ஒன்றை சொல்வதும் உள்ளே இன்னும் மொன்றை நடைமுறைப்படுத்துவதுமாகத்தான் இருக்கின்றது. எங்களுடைய யாழ்ப்பாண புத்தி ஜீவிகளின் ஆலோசனையின் பெயரிலே தான், சரி புதிதாக வந்த ஒரு அரசாங்கம் மூன்று மாதம் அல்லது ஆறு மாதம் அந்த விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்என்பதற்காக நாங்கள் மௌனமாக, எந்த நம்பிக்கையில தேர்தலுக்கு முன் இருந்தோமோ அதை நோக்கி எதிர்பார்த்திருக்கின்றோம். ஆனால் இன்று நடக்கின்ற நடைமுறை நாட்டிலே எதுவுமே எங்களுக்கு சாத்தியமில்லாத ஒரு சூழ்நிலைதான் இந்த அரசாங்கமும் செய்யப் போகின்றது என்பதையும் கடந்த அரசாங்கங்களை விட மிகப்பெரிய நெருக்கடிகளை இந்த அரசாங் கத்தில் நாங்கள் எதிர்கொள்வோம் என்ற ஒரு மனநிலை எங்களுக்கு தென்படுகிறது.
நாட்டில் நிலைமைகள் அப்படித்தான் இருக்கின்றது. இன்றைக்கு 50 48 நாளாகின்றது அநுர அரசு ஆட்சிப்பொறுப்பேற்று, இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் இவர்கள் கற்றுக் கொள்வதற்குரிய காலங்கள் அல்லது நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு இடையில் எங்களுடைய வளங்கள் அல்லது எங்களுடைய வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு, சுரண்டப்பட்டு விடும், சந்திரசேகரன் அமைச்சர், கடற்றொழிலாளர் பிரச்சினையை அறிந்தவர். ஆனால் இன்றும் இந்திய மீனவர்கள் எங்களுடைய வளத்தையும் வாழ்வாதாரத்தையும் அழித்துக் கொண்டு செல் கின்றார்கள். கைது செய்வதற்கு யாருமில்லை. நேற்றைய தினம், பகல் முல்லைத்தீவு மாவட்டத் திலே பல நூற்றுக்கணக்கான படகுகள் நின்று கடற்றொழிலே ஈடுபடுகிறது. பகல் ஒரு மணி அளவிலே இலங்கையினுடைய கடற்றொழில் பிரதி அமைச்சருக்கு தொலைபேசி ஊடாக நாங்கள் தொடர்பு கொண்டோம். அந்த மாவட்ட உதவிபணிப்பாளருக்கு தொடர்பு கொண்டோம். யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பகலிலே வந்து சுதந்திரமாக எங்களுடைய கடலிலே தொழில் செய்கிற அளவுக்கு இந்த நிலைமை இருக்கின்றது. ஆனால் அரசாங்கம் வாயால மட்டும் வீரம் பேசுகிறது. ஆனால் ஒரு எல்லைக்கு மேல் தமிழர்கள் பொறுக்க மாட்டோம் ‘எங்களுடைய வளத்தையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்று’ என்ற செய்தியை மிக விரைவிலே வடமாகாணம் இந்த அரசாங்கத்திற்கு தெரியப் படுத்தும். அதற்குரிய சந்திப்பாகத்தான் ஜனாதி பதியை சந்திப்பதற்குரிய நேரத்தை நாங்கள் கோரி இருக்கின்றோம். இறுதியாக ஜனாதிபதியோடும் ஒரு நல்லெண்ண ஒரு முயற்சியாக எதிர் பார்க்கிறோம். ஜனாதிபதியை நம்பித்தான் வாக் களித்தார்களே ஒழிய ஏனையவர்களை நம்பி வாக்களிக்கவில்லை. அவரையும் ஒருமுறை சந்தித்து கலந்துரையாடிய பின்பு எமது முடிவை வடக்கு மாகாண மீனவர்கள் கடந்த காலத்தில் எப்படி எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோமோ அதே நிலை தொடரும்.