 பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவருக்கான பாலின சீர்மை பற்றிய பயிற்சிப் பட்டறை திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவருக்கான பாலின சீர்மை பற்றிய பயிற்சிப் பட்டறை திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த திருக்கோணமலை நகர சபைச் செயளாலர் இராஜசேகர் அவர்கள் கூறுகையில், இவ்வமைப்பானது சிறப்பான முறையில் நமது அடுத்த தலைமுறையினரை செம்மை படுத்துகின்றது. ஆகவே இனி வரும் காலங்களில் மாநகர சபையின் ஒரு சில திட்டங்களோடு ஒருங்கிணைத்து செயற்படுவோம். அதுமட்டுமின்றி இதே போன்ற பல மாணவர் மன்றங்களை உருவாக்குவோம்” என்று கூறினார்.
இந்த அமர்வினை பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பணிப்பாளர் அஜித் குமார் உதயகுமார் தலைமை ஏற்று நடத்தினார். அறநெறி ஆசிரியை திருமதி.ஜெயவதணி இளங்கோவன் மற்றும் அறிவு ஒளி மைத்தின் ஆசிரியை செல்வி.டிலக்ஷிகா புகழ் வேந்தன் ஆகியோரால் இந்நிகழ்வு சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.