திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் ஏக மனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான பிரேரணையை உறுப்பினர் முத்து சிவமோகன் கொண்டு வந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி, சுயேட்சைக்குழு, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ்க்கூட்டணி, போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவாக தமது கருத்துக்களை முன்வைத்தமையைத்தொடர்ந்து குறித்த சம்பவத்திற்கான கண்டனம் சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.


