திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளரான 32 வயதுடைய பிரகாத் தர்மசேன என்பவர் இன்று (21) வயல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்குக் காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்றபோது உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் கோமரங்கடவல பிரதேச சபையில் NPP கட்சியில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



