திருகோணமலையில் மிக நீண்ட நாட்களின் பின் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வங்காள விரிகுடாவில் நாளைய தினம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழமுக்கம் இன்று உருவாகியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திருகோணமலையில் நெற் செய்கைக்காக விவசாயிகள் தயாராகவுள்ள நிலையில் தம்பலகாமம், கிண்ணியா,முள்ளிப்பொத்தானை, கன்னியா உள்ளிட்ட இடங்களில் இன்று வரை கனமழை பெய்து வருவதுடன் தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் தாம் நெற்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.