‘தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்’ தமிழீழ விடுதலைக் கவிஞனின் பிறந்த நாள் இன்று…

தமிழிழீழ விடுதலைக்காக ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக உணர்வூட்டிய கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்த நாள் (03.12.1948)  இன்றாகும்.

தமிழீழ விடுதலைக் கவிஞன் புதுவை இரத்தினதுரை அவர்கள், யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய “இந்த மண் எங்களின் சொந்த மண்” பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வுப்பூர்வமான பாடல்.

புதுவை இரத்தினதுரையின் படைப்பிலக்கியம் தமிழிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு உந்துசக்தியாக இருந்ததை மறுக்க முடியாது. சுதந்திர கவிதை உலகில் போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பெருமை அவரைச் சாரும்.