தளபதி சிறிராமின் தந்தை காலமானார்!

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதி சிறிராம் அவர்களின் தந்தையும் அரசியல் துறை போராளியான இசைப்பிரியாவின் மாமனாருமான கணபதிப்பிள்ளை தர்மராசா சாவகச்சேரியில் நேற்று (05)
காலமானார்.PHOTO 2026 03 06 14 04 58 தளபதி சிறிராமின் தந்தை காலமானார்!

PHOTO 2026 03 06 14 04 52 தளபதி சிறிராமின் தந்தை காலமானார்!

அச்சுவேலி – மாவத்தையை பிறப்பிடமாகவும் விநாசித்தம்பி வீதி, சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு நிலை முதன்மை ஆசிரியரான கணபதிப்பிள்ளை தர்மராசா அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார்.

முத்துக்கிருஷ்ணன் மலாக்கா : இசைப்பிரியா - 2இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதியாகச் செயற்பட்ட சிறிராம் (அருள்செல்வன்) அவர்களது அன்புத் தந்தையும் தமிழீழ தேசிய தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக செயற்பட்ட அரசியல்துறை போராளி இசைப்பிரியா (சோபனா) அவர்களது மாமாவும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.