இந்தியாவின் இராமேஸ்வரம் இலங்கையின் தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கு இடையில் நடைபெற்றுள்ள சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாடலப்பட்டுள்ளது.
இந்த புதிய கப்பல் பாதையைத் தொடங்குவதன் மூலம் இந்தியா-இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களும் ஆராய்ந்துள்ளனர்.



