இலங்கையில் தமிழர்களின் சுதந்திரப்போராட்டம் என் பது இலங்கையானது பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஆரம்பமானது.பிரித் தானியரது ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பல்வேறு கட்டமைப்புகளில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக இந்த நாட்டிலிருந்த பெரும்பான்மையின தேசிய சிங்கள சக்திகள் தமிழர்களை இந்த நாட்டில் நசுக்குவதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்துவந்தன.இலங்கையானது பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையில் தமிழர்களை நசுக்குவதற் கான தீவிர முன்னெடுப்புகளை சிங்கள பௌத்த பேரின வாத சக்திகள் முன்னெடுத்தன.
இந்த நாட்டில் பௌத்த சிங்கள மேலாதிக்க சக்திகளின் பல்வேறு அச்சுறுத்தல்களும் அடக்குமுறை களுக்கும் மத்தியிலேயே இந்த நாட்டில் சிறுபான்மை சமூகமாக தமிழ் பேசும் மக்கள் காணப்பட்டார்கள். தங்களை மிஞ்சியவர்கள் இல்லையென்ற வகையில் இந்த நாட்டில் தமிழ் பேசும் சமூகம் சிங்கள பௌத்த மேலாதிக் கத்தினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாகிவந்தது.
இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழர்களின் எழுச்சியை விரும்பாத சிங்கள பேரினவாத தேசம் தொடர்ச்சியாக தமிழர்கள் மீது அடக்குமுறைகளையும் அழிப்புகளையும் முன்னெடுத்துவந்தது.1958ஆம் ஆண்டு 1977ஆம் ஆண்டு 1983ஆம் ஆகிய காலப்பகுதிகளில் தமிழர் கள் மீது இனஅழிப்பு நடவடிக்கைகளை சிங்கள தேசம் முன்னெடுத்தது.
இதேபோன்று இந்த நாட்டில் வாழ்ந்த மற்று மொரு தமிழ் பேசும் இனமான முஸ்லிம்கள் மீது இந்த நாடு சுதந்திரமடைவதற்கு முற்பட்ட காலம் தொடக்கம் தொடர்ச்சியாக அடக்குமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அவர்களின் கலாசாரங்களை ஏற்றுக்கொள்ள சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் மறுத்து 1915ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் முன்னெடுத்துவந்தனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதம் 1976,1982 உட்பட காலத்திற்கு காலம் பல்வேறு அழிவுகளையும் அடக்குமுறைகளையும் முன்னெடுத்துவந் தது. ஆனால் முஸ்லிம்களை பொறுத்த வரையில் இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்தும் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளை எதிர்க்கமுடியாத நிலையில் தொடர்ச்சியாகவே அடக்குமுறைகளை எதிர் கொண்டுவந்தனர்.
ஆனால் தமிழர்களைப்பொறுத்த வரையில் இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவற்றிற்கு எதிராக கிளர்ந் தெழுந்த நிலைமையேகாணப்பட்டது.அக்காலத்தில் தமிழர்களின் இந்த போராட்டத்தில் முஸ்லிம்களில் அடக்கு முறைக்கு எதிரான கருத்துகளைக்கொண்ட முஸ்லிம்க ளும் பங்குகொண்டதினால் இந்த போராட்டங்கள் பாரி யளவில் சிங்கள தேசத்திற்கு சவாலாக அமைந்தது.அகிம்சை போராட்டத்திலும் ஆயுத போராட்டத்திலும் இந்த வடிவங்கள் தமிழர்கள் முஸ்லிம்களாக இணைந்து செல்லும் நிலையேற்பட்டபோது இந்த நிலைமையானது இந்த நாட்டின் சிங்கள பேரினவாதத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற காரணத்தினால் தமிழர்களுக்கும் முஸ் லிம்களுக்கும் இடையிலான விரிசல்களையும் நம்பிக்கை யீனங்களையும் முரண்பாடுகளையும் திட்ட மிட்ட வகையில் முன்னெடுப்பதற்கு சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் முன்னெடுத்த முயற்சிகளுக்கு முஸ்லிம்கள் மத்தியிலிருந்த இனப்பற்றில்லாத சமூக சிந்தனையற்றவர்கள் ஆதரவாக செயற்பட்டமை தமிழ்-முஸ்லிம்கள் மத்தியிலான உறவுகளில் பல்வேறு தாக்கங் களை ஏற்படுத்தும் வகையான செயற்பாடுகள் முன்னெடுக் கப்பட்டன.
இந்த நாட்டில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக இரு இனங்களும் இணைந்து போராடமுனைந்தபோது சிங்கள பௌத்த பேரினவாதம் விழித்துக்கொண்டு இரு இனங்களுக்கும் இடையே மோதல் நிலைமையினை ஏற்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவந்தது.
சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் தமிழ் பேசும் இனத்திற்கான உரிமை என்ற கோசத்துடன் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது இந்த இரு இனங்களும் இணைந்து போராடும் நிலைமைகளை வடகிழக்கில் தடுப் பதற்கு பல்வேறு உபாயங்களை சிங்கள பேரினவாதம் முன் னெடுத்தது.
இதன் உச்சமாகவே 1988 தொடக்கம் வடகிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மோதல்களை உக்கிரப்படுத்தும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது.இலங்கையில் இரு இனங்களையும் இணையவிடாமல் தடுப்பதற்கும் இரு இனங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்துவதற்கும் இலங்கையின் முக்கிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஊடாக பல்வேறு செயற் பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
1990ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் முஸ்லிம் இளைஞர்களைக்கொண்ட பல்வேறு ஆயுதக்குழுக்களினை உருவாக்கிய சிங்கள பௌத்த பேரினவாத அரசுகள் தமிழர் கள் மீது வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் முன் னெத்தனர். கிழக்கு மாகாணம் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்துவாழும் மாகாணம் மட்டுமன்றி வடகிழக்கு இணைப்பின் அத்திபாரமாகவும் இருந்த காரணத்தினால் தொடர்ச்சியாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ்-முஸ்லிம் மக்களை கொதிநிலையில் வைத்திருப்பதற்கான முன்னெடுப்புக ளையே முன்னெடுத்துவந்துள்ளது.வடகிழக் கு தமிழர் தாயகம் என்ற நிலைமையினை இல்லாமல்செய்வதற்கும் தமிழர்க ளின் உரிமைப்போராட்டத்தினை சிதைப்பதற்கும் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் தொடர்ச்சியான விரிசல்களை பேணும் செயற்பாட்டையே முன்னெடுத்துவந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்திலும் விடுத லைப்புலிகள் மீது பழியை ஏற்படுத்துவதற்கும் விடுதலைப் புலிகள் மீது முஸ்லிம்கள் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கும் பல்வேறு முன்னெடுப்புகளை சிங்கள தேசம் முன்னெடுத்தே வந்துள்ளது.கிழக்கில் சிங்கள குடியேற்றங்களையும் ஆக்கிர மிப்புகளையும் முன்னெடுத்த அதே வேகத்துடன் தமிழ்-முஸ்லிம்கள் மீதான முரண்பாடுகளை ஏற்படுத்தும் செயற் பாடுகளையும் முன்னெடுத்தது.
எனினும் காலப்போக்கில் முஸ்லிம்கள் தமிழர்கள் மீதான நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு தமிழீழ விடுத லைப்புலிகள் காலத்தில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தபோதிலும் அக்காலத்தில் அதனை குழப்பும் வகையில் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களையும் முஸ்லிம் ஆயுதக்குழுக்களையும் பயன்படுத்தி இனமுரண்பாடுகளை ஏற்படும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் பின்னர் 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையி லான முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பிள்ளையான் -ஹிஷ்புல்லா போன்றவர்கள் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில் அரசியல் ரீதியாகவும் அபிவிருத்திகள் ஏற்றத் தாழ்வுகள் உருவாக்கப்பட்டு தமிழ்-முஸ்லிம்கள் மத்தியிலான உறவுகளை சீர்க்குலைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டுவந்தன.
2015ஆம் ஆண்டு தொடக்கம் ஏற்பட்ட நல்லாட்சி காலப்பகுதியில் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியிலான சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும் முரண்பாடுகளை நீக்கும் வகையிலும் பல்வேறு முயற்சிகள் தமிழ் தேசிய பரப்பில் முன்னெடுக்கப்பட்டுவந்தன.கிழக் கில் செயற்பட்டு வந்த சிவில் சமூக அமைப்புகள்,பொது அமைப்புகள் இதனை முன்னெடுத்துவந்தன.
எனினும் தமிழ்-முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான பல்வேறு செயற்பாடுகளும் முன்னெடுக்கப் பட்டுவந்த நிலையிலேயே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணமும் இலக்கு வைக்கப்பட்டது.ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மூலம் இந்த நாட்டில் பெரும்பான்மை சிங்கள பேரினவாத சக்தி மீண்டும் ஆட்சிபீடம் ஏறிய போதிலும் கிழக்கில் ஈஸ்டர் தாக்குதலை ஏற்படுத்தி தமிழ்-முஸ்லிம்களிடையே பிரி வினை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தடுக் கப்பட்டன.அதற்கான பிரதான காரணியாக அன்றைய காலகட்டதிலிருந்தது இருந்தது சிவில் அமைப்புகளும் தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நிதானமான செயற்பாடுகளுமாகும்.
கிழக்கில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை வைத் தும் தமிழ்-முஸ்லிம்களுக்கிடையிலான முரண்பாடு களை வைத்தும் பிள்ளையான் போன்றவர்கள் மேலெழுந்த போதிலும் காலப்போக்கில் அதன் உண்மைநிலைகளை மக்கள் புரிந்துகொண்ட நிலையில் பிள்ளையான் போன்ற வர்கள் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர்.
இன்றைய காலப்போக்கில் இனவாதம் என்பது மிகவும் குறைந்த நிலையில் உள்ளபோதிலும் தமிழ்-முஸ்லிகளிடையே உறவு என்பது இன்னும் நீரின் மேல் காணப்படும் எண்ணெய்யைப்போலவே காணப்படுகின்றது.கடந்தகாலத்தினை போல் இல்லாவிட்டாலும் ஓரளவு இரு இனங்களிடையே முரண்பாடுகள் இல்லாத ஒன்றுபட்ட உணர்வுகள் காணப்படுகின்ற போதிலும் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன்மூலம் இலாபம் அடையும் சக்திகளின் செயற்பாடுகள் தொடர்ந்து இருந்தவண்ணமே உள்ளது.
தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையே காணப்படும் காணி தொடர்பான முரண்பாடுகளை வைத்து இன்று இரு இனங்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் இரு இனங்க ளிடையே காணப்படும் புரிந்துணர்வுகளும் கடந்தகால கசப்பான செயற்பாடுகளும் பாடமாக கொண்டவர்களாகவே செயற்பட்டுவரும் நிலைமை காணப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த நாட்டிலும் தமிழ்பேசும் பகுதிகளிலும் ஆட்சிமாற்றத்தினையும் ஆட்சி அதிகாரத் தினையும் எதிர்பார்த்து இலவுகாத்த கிளிபோல் இருப்பவர் களின் செயற்பாடுகள் தொடரும் நிலைமையே காணப் படுகின்றது.இதன்மூலம் எதிர்காலத்தில் தமிழ்-முஸ்லிம் உறவுகளின் நிலைமையினை சீர்குலைக்கும் முயற்சியை தடுக்கமுடியுமா என்பது கேள்வியாகவே இருந்துவருகின்றது.



