‘தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்’ எனவும் ‘எமது தமிழினத்தின் உரிமை மற்றும் இருப்பை அழிக்கும் அபிவிருத்தி என்ற மாயை தேவையில்லை’ எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘தேர்தல் வந்தால் அபிவிருத்தி என்று கூறி பணத்தின் பின்னால் அலையும் கொள்கை இல்லாதவர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள்’.’அவ்வாறானவர்கள் சொந்த இனத்தையும் சொந்த ஊரையும் காட்டிக் கொடுப்பார்கள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இனத்தின் விடிவுக்காக கொள்கை மாறாமல் திடமாக நிற்க வேண்டும்.
‘பாமர மக்களை ஏமாற்றும் மாற்றுக் கட்சிக்கு துணை போகும் ஆதரவாளர்கள் பணத் தொகையை பெற்றுக்கொண்டு தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றார்கள்’.’எனவே தேசிய சிங்கள கட்சிகளுக்கு எந்த விதத்திலும் நம் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என்பதனை உள்ளூராட்சி சபையில் காட்ட வேண்டும்’ என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.