தமிழ் மக்களை சிங்கள தரப்புக்கு வாக்களிக்க வைப்பதற்கு முயற்சி – கூட்டமைப்பைச் சாடுகிறார் கஜேந்திரகுமார்

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஒரு பொது வேட்பாளரை நிறத்துவது என்றும் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் விரும்பினால் இரண்டாவது வாக்கைத் தமக்கு பிடித்த வேட்பாளருக்கு வழங்கலாம் என்றும் கூறுகின்றது. இது நேரடியாக சிங்களத் தரப்புக்கு வாக்களிக்குமாறு கூறுவதற்கு சமன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக வரக்கூடியவர்கள் யாரிடத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இதனால், வாக்கு சாவடிக்கு சென்று வாக்காளிக்கும் மனோநிலையில் தமிழ் மக்கள் இல்லை. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி பொது வேட்பாளர் ஒருவரை வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் களம் நிறுத்தும் வாய்ப்பு என்ற கருத்து தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் இந்த பொது வேட்பாளர் என்ற கருத்துடன் உடன்படவில்லை. தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக வரக்ககூடியவர்கள் யாரிடத்திலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இதனால் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்காளிக்கும் மனோநிலையில் தமிழ் மக்கள் இல்லை. இவர்கள் பொது வேட்பாளர் என்ற விடயம் என்பதை கையில் எடுப்பதே தமிழ் மக்களை வாக்குச் சாவடியை நோக்கி வரவைப்பதற்குத்தான்.

தமிழ் மக்களின் வாக்குகள் இந்த சிங்கள தரப்புகளுக்கு போகக்கூடாது என்பதுதான் தமிழ் மக்களிடத்தில் மேலோங்கிநிற்கும் பார்வை. இப்படியான தமிழ் மக்களின் அதிருப்தியை வெளிக்காட்டுகின்ற வகையிலான தந்திரோபாய நகர்வை கையாளாமல் ஜனநாயக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஒரு பொது வேட்பாளரை நிறத்துவது என்றும் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் விரும்பினால் இரண்டாவது வாக்கைத் தமக்கு பிடித்த வேட்பாளருக்கு வழங்கலாம் என்றும் கூறுகின்றது. இது நேரடியாக சிங்களத் தரப்புக்கு வாக்களிக்குமாறு கூறுவதற்கு சமன்” என்றும் கஜேந்திரகுமாா் தெரிவித்தாா்.