தமிழ் மக்களிடம் 13ஐ தருகிறேன் என்ற வியாபாரத்தை பேசமாட்டேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்களிடம் 13ஐ வைத்து வியாபாரம் செய்வதற்கு நான் வரவில்லை. அந்த வியாபாரத்தை செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை. ஒட்டுமொத்த இலங்கை மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதோடு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.