தமிழ் பொதுக் கட்டமைப்பினரைச் சந்திப்பதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.