தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பில் எழுச்சிகரமான வரவேற்பு!

Unknown 9 தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பில் எழுச்சிகரமான வரவேற்பு!

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பொலிக்ண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சென்ற பா.அரியநேத்திரனுக்கு எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

Unknown 1 3 தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பில் எழுச்சிகரமான வரவேற்பு!

கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரசாரத்திற்காக சென்ற பா.அரியநேத்திரனுக்கு மட்டக்களப்பு மாவட்ட நுளைவாயிலில் வைத்து பொது அமைப்பினரால் பாரிய வரவேற்பு வழங்கப்பட்டிருந்ததுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வாகனப்பேரணியாக அழைத்துச்சென்றனர்.

Unknown 2 3 தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பில் எழுச்சிகரமான வரவேற்பு!

முன்னதாக, திருக்கோணமலை அருள்மிகு வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்திற்கு சென்ற பா.அரியநேத்திரன் ஆலய வழிபாட்டினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.