தமிழ்ப் பொது வேட்பாளருக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு!

PHOTO 2024 08 30 17 39 08 தமிழ்ப் பொது வேட்பாளருக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு!

பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தை தொடர்ந்து வரும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பழைய முறிகண்டி பகுதியில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முதலாம் கட்ட பரப்புரை பயணத்தை நிறைவு செய்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரசார நடவடிக்கைகள் இன்றைய தினம் (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கான முதலாம் நாள் பிரசார பயணம் இன்று மாலை 3.00 மணியளவில் பழைய முறிகண்டிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டபோது முல்லைத்தீவு மக்களால் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது.