பத்திரிகையாளர் மதி
காலகாலமாக சிங்கள வேட்பாளருக் குத்தான் தமிழ் மக்கள் தமது வாக்குகளை செலுத்தி வந்துள்ளனர். ஆனால் அவ்வாறு ஜனா திபதியாக வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவாறு எந்த ஒரு திட்டத்தையும் உருவாக்குவதற்கு அந்த ஜனாதிபதிகள் முயற்சிக்க வில்லை. இருந்தும் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தமிழ் மக் களுக்கான தீர்வை வழங்குவது போன்று சகல வாக் குறுதிகளும் அளிக்கப்படுகின் றது. ஜனாதிபதியாகி ஆட்சியில் அமர்ந்ததும் அத்தனை வாக்குறுதிக ளும் காற்றில் பறக்க விடப்பட்டு விடும்.
கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தலைமைகளும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கூறிவந்தனர். அவர்களின் கோரிக் கைகளை தமிழ் மக்களும் சிங்கள வேட் பாளருக்கு வாக்களித்தனர். ஆனால் அதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை.
இந்த நிலையில் தான் 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித்தேர்தலில் பொது அமைப்பு கள் ஒன்றிணைந்து ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை முன் நிறுத்தியுள்ளனர். அவர் ஜனாதிபதி ஆகின்றாரோ இல்லையோ அவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனைத்தும் சர்வதே சத்தின் கவனத்தைப் பெற வைக்க உதவும். அதே நேரம் சிங்களத்தரப்புக்கும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும்.
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்திய பின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் அடுத்தடுத்து தமிழ் மக்களின் ஆதரவைப் பெற வந்து போகும் நிலைமை காணப் படுகின்றது. இது வரை காலமும் இவ்வாறு நடந்தது இல்லை. இது தமிழ்ப் பொதுவேட்பாளரின் பலம் அத்தோடு அது தொடர்பில் அவர்களுக்கு இருக்கும் அச்சம் என்பவற்றை வெளிக்காட்டியுள்ளது.
எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது இன்றைய கால கட்டத்தில், சர்வதேசமாக இருந்தாலும் சரி, தேசிய ரீதியிலும் சரி மிக முக்கிய மான விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
திருமதி ரஜனி ஜெயப்பிரகாஸ்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.காலம் காலமாக நாங்கள் சிங்கள தலைவர்களுக்கு வாக்களித்து சிங்கள தலைவர்களை ஏற்றுக் கொள்வதற்காகவும் சிங்கள தலைவர்களை ஜனாதிபதியாக்குவதற்கும் நாங்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரங்களை கடந்த காலத் தில் முன்னெடுத்திருந்தோம்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எங்கள் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், இந்த நாட்டில் பதவியேற்ற சிங்கள ஜனாதிபதிகள் தமிழ் மக்களுக்குரிய எந்த தீர்வினையும் நோக்கி பயணிக்காத நிலையில் இம்முறை தமிழ்ப் பொதுவேட்பாளர் கள மிறக்கப்பட்டுள்ளார்.
காலம்காலமாக ஏமாற்றப்பட்டுவரும் ஒரு இனமாகவும் இலங்கை அரசாங்கம் எந்த நீதி பொறிமுறையினை முன்வைக்காத நிலையிலும் சர்வதேச நீதியும் விசாரணையும் வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கின்ற ஒரு இனத்தின் அடையாளமாக பொதுவேட்பாளராக அரியநேத்திரன் காணப்படுகின் றார்.
தமிழ் தேசிய இனமாக நாங்கள் இந்த நாட்டில் எங்களுக்காக உயிர்நீர்த்தவர்களுக்கான நீதிப்பொறிமுறைக்காக சங்கு சின்னத்திற்கு புள்ளடியையிட்டு பொதுவேட்பாளரை அங்கீ கரிக்கின்றபோது சர்வதேசத்திற்கு ஒருமித்த குரலாக நாங்கள் ஒன்றிணைத்து எமது உரிமை தொடர்பாகவும் அடக்குமுறைகள் குறித்தும் ஒரு செய்தியை சொல்ல முடியும். நான் தொடர்ந்து தமிழ் தேசிய கொள்கையின் கீழ் பயணிப்பவள் என்ற காரணத்தினால் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கின்றேன்.கிழக்கு மாகாணத்தில் பொதுவேட்பாளருக்கு ஒவ்வொருத்தரும் தமது தனித்துவமான பங்களிப்பினை சங்கு சின்னத்திற்கு வழங்கும் புள்ளடிகள் ஒரு அங்கீகாரமாகத்தான் நான் பார்க்கின்றேன்.
சிவில் செயற்பாட்டாளர்
என்றுமே இல்லாதவாறு தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இம் முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்டிருப் பது சிறுபான்மை சமூகத்தின் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வெளிப்பாடாக காணப் படுகிறது. பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வர முடியும். ஆனால் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிட்டு வெற்றிபெறாவிட்டாலும் மக்கள் இதன் மூலம் தெளிவுபெற வேண்டும். அரசியலமைப்பில் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வர முடியாது என்று கூறவில்லை. எனவே இவ்வாறு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது சிறுபான்மை சமூகத்தின் வரவேற்கத்தக்க விடயமாக கருதப்படுகிறது.
சிவில் செயற்பாட்டாளர்
வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். 75 வருட காலமாக அரசியல் தீர்வின்றி வாழும் நிலையில் தமிழ் பொது வேட்பாளர் என்பது ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருப்பது முக்கியமானது. ஆனால் தமிழ் கட்சிகள் பல பிரிவுகளாக பிரிந்து காணப்படுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளை யான், வியாழேந்திரன் யாழ்ப்பாணத்தில் அங்கஜன், டக்ளஸ் போன்றவர்கள் பல பிரிவு களாக பிரிந்துள்ளனர். இது தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அகத்தியர் சுவாமிகள்(தென்கையிலை ஆதீனம்)
முற்றுமுழுதாக தமிழ்த் தேசத்தில் அக்கறை இருக்கின்றவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றுதான் இருப்பார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் சிங்கள ஜனாதிபதிகளை தமிழ் மக்கள் தெரிவு செய்துகொண்டுதான் இருந்தனர். இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இனிமேலும் எதுவும் தமிழ் மக்களுக்காக சிங்கள தலைமைகள் செய்யப்போவதில்லை. 2024 மட்டும் மல்ல 3024ம் ஆண்டு வந்தாலும் சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையினையும் செய்யப்போறதும் இல்லை. ஆக இருக்கிற சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களால் எதைச் செய்யலாமோ அதை செய்ய வேண்டும். அதனால் இப்போதைக்கு எங்களுடைய முழுமையைக்காட்டக்கூடிய தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் மூலமாக எங்களுடைய திரட்சியை, எங்களுடைய ஒற்றுமையை தமிழ் மக்கள் மீளவும் வலியுறுத்துகின்றோம். நாம் எப்போதும் ஒரு நிகழ் நிலையில் இருக்க வேண்டும். அந்த நிகழ் நிலையில் இருப்பதற்கான ஒரு விடையம்தான் இந்த தமிழ்ப் பொது வேட்பாளர். இதனால் தற்சமையம் எதும் தமிழ் மக்களுக்கு கிடைக்காது விட்டாலும்,ஆனால் ஏதோ ஒரு காலத்தில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியமை அதற்கு உதவியாக இருக்கும்.
அந்த வகையில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு கூட்டு முயற்சியாக வாக்களிக்க வேண்டும். ஆகக்குறைந்தது நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதை வெளிப்படுத்த வேண் டும். இதை வெளியுலகுக்கு சொல்வதிலும் பார்க்க எங்களுக்கு நாங்களே கூட சொல்லிக் கொள்ளலாம். என்றைக்கும் நாங்கள் தமிழ் தேசியம் என்ற ரீதியில் ஒருமித்த உணர்வோடு தமிழ் மக்கள் இருக்க வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் குறித்து கவலை கொள்ளத்தேவையில்லை.
சிவஸ்ரீ சி.குகநாதன் குருக்கள்
இந்த நாட்டில் சிங்கள பௌத்த பேரினவாதி ஒருவரே ஜனாதிபதியாக வாரவேண்டும் என்று சட்டம் இருக்கின்றது.அதனை உடைத் தெறியும் வகையில் தமிழ் மக்களினால் இங்கு தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப் பட்டுள்ளார்.அவருக்கு வடகிழக்கு தமிழ் மக்கள் தமது பேராதரவினை வழங்குவது மட்டு மல்லாமல் இரண்டாம் மூன்றாம் தெரிவுகளுக்கு செல்லாமல் எங்கள் ஒரே தெரிவாக சங்கு சின் னத்திற்கு வாக்களித்து வடகிழக்கில் எங்கள் பலத்தினை வெளிப்படுத்துவதன் ஊடாக நாங்கள் சிங்கள மக்களுடன் இணைந்து
செல்வதற்கு தயாராகயில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு செய்தியை அனுப்புவதற்கு வழி யாக அமையும். நாங்கள் எதிர்கொண்டுள்ள இந்த ஜனநாயகப்போரினை தவறவிடாது எமது வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யவேண்டும்.தமிழர்களின் தேசியம் சுயநிர்ணய உரிமை போன்றவற்றினை பாது காத்து எதிர்கால சந்திக்கு வழங்கவேண்டும் என்பதுடன் இன்று தமிழ் தேசிய சக்திகள் பலவாறாக பிரிந்துகொண்டு இந்த நாட்டில் 15வருடங்களுக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை மறந்து எமது சமூகம் இருக்கின்றது.எமது வரலாறுகளை எமது எதிர்கால சமூகத்திற்கு தைரியமாக எடுத்துக்கூறுவதற்கு இந்த பொதுவேட்பாளரை வெற்றிபெறச்செய்வதன் மூலம் வரலாற்றுக்கடமையினை நிறைவேற்ற முடியும். இந்த சந்தர்ப்பத்தினை தமிழ் மக்கள் தவறவிடக்கூடாது. அதனை தவறவிட்டால் நாங்
கள் மீண்டு எழுவது என்பது மிகவும் கடினமாக அமையும்.சர்வதேசத்தில் வாழும் சகல தமிழர் களும் ஒன்றாக செயற்படுவோமானால் எங்களை அசைப்பதற்கு ஏனைய நாடுகள் ஆஞ்சும். பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல், சுயதேவைகளுக்காக செல்லாமல் தமிழர்களின் உரிமையினை நோக்காக கொண்டு பொது வேட்பாளரை ஆதரிக்கவேண்டும்.




